நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? நியாயம் யார் பக்கம் இருக்குன்னு பாருங்க – ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடி பேட்டி

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக கடந்த மாதம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தலைநகர் தாக்காவில் நடைபெற்ற அந்த போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த இலக்கை துரத்திய இந்தியா ஒரு கட்டத்தில் வெற்றியை தன் வசம் வைத்திருந்தது. ஆனால் முக்கிய நேரத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அவுட்டானதும் மடமடவென விக்கெட்டுகளை பரிசளித்த இந்தியா கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க முடியாமல் போட்டியை ட்ரா மட்டுமே செய்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

Harmanpreet Kaur

- Advertisement -

அதை விட அந்த போட்டியில் முக்கிய நேரத்தில் தமக்கு தவறான தீர்ப்பு வழங்கி அவுட்டாக்கிய அம்பயர் மீது கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கௌர் ஸ்டம்ப்பை பேட்டால் அடித்து விட்டு மிகுந்த கோபத்துடன் திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பினார். அத்துடன் அடுத்த முறை வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது நடுவர்களுக்கு எதிராகவும் விளையாட கற்றுக்கொள்ள வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் வெளிப்படையாக கடுமையாக விமர்சித்தார்.

எதற்கும் வருத்தப்படவில்லை:
அதை விட தொடர் சமனில் முடிந்ததால் பகிர்ந்து கொடுக்கப்பட்ட கோப்பையை வாங்குவதற்காக வந்த வங்கதேச கேப்டன் சுல்தானாவிடம் “போய் அம்பயர்களையும் போட்டோ எடுப்பதற்கு அழைத்து வாருங்கள். அவர்கள் இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசியது இந்திய ரசிகர்களையே அதிருப்தியில் ஆழ்த்தியது. ஏனெனில் வரலாற்றில் சச்சின் போன்ற ஜாம்பவான்கள் தங்களுக்கு எதிராக தவறான தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் அமைதியாக சென்ற நிலையில் ஸ்டீவ் பக்னர் போன்ற நடுவர்கள் இந்தியாவுக்கு எதிராக வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கிய போதெல்லாம் கங்குலி போன்ற கேப்டன்கள் விமர்சித்ததில்லை.

அதை விட நடுவர்கள் செய்த தவறுக்காக வங்கதேச அணியினரை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசியது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் கிரிக்கெட்டை விட தம்மை பெரிதாக நினைக்கும் ஹர்மன்ப்ரீத் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் வெளிப்படையாக கேட்டுக் கொண்டார். அந்த நிலைமையில் போட்டி உபகரணங்களை சேதப்படுத்தியது, நடுவர்களை பொதுவெளியில் விமர்சித்தது போன்ற விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு 25% போட்டி சம்பளத்திலிருந்து அபராதம் மற்றும் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி அதிரடியான தண்டனை அறிவித்தது.

- Advertisement -

மேலும் 3 கேரியர் கருப்பு புள்ளிகளையும் பெற்ற அவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 3 கருப்பு புள்ளிகளை பெற்ற முதல் வீராங்கனை என்ற மோசமான பெயரையும் பெற்றார். இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு பின் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த ஹர்மன்ப்ரீத் கெளர் அப்படி நடந்து கொண்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியே அதற்கு நேர்மாறாக தாம் எதற்காகவும் வருத்தப்படவில்லை என்று அதிரடியாக பேசியுள்ளார்.

Harmanpreet-3

குறிப்பாக அந்த சமயத்தில் நடுவர்கள் தமக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் நியாயம் தமது பக்கமே இருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் எதற்கும் வருந்துகிறேன் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் அன்றைய நாள் முடிவில் ஒரு கிரிக்கெட்டராக நீங்கள் நியாயமான விஷயங்கள் நடப்பதையே காண விரும்புவீர்கள். மேலும் ஒரு கிரிக்கெட்டராக நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்த உங்களுக்கு எப்போதும் உரிமை உண்டு. அத்துடன் அந்தப் போட்டியில் எந்த கிரிக்கெட்டரிடமோ அல்லது நபரிடமோ நான் தவறாக எதுவும் கூறியதாக நினைக்கவில்லை”

இதையும் படிங்க:எல்லாம் மாமனார் இம்பேக்ட் தான், கேஎல் ராகுல் விமர்சனத்தில் உல்ட்டாவாக மாறிய வெங்கடேஷ் பிரசாத் – கலாய்க்கும் ரசிகர்கள்

“களத்தில் நடந்ததை தான் கூறினேன். அதனால் நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை” என்று கூறினார். இருப்பினும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் கருப்பு புள்ளியை ஏற்படுத்தும் வகையில் ஐசிசியால் தடை பெற்றுள்ள அவர் அதன் காரணமாக வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் சீனாவில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement