எல்லாம் மாமனார் இம்பேக்ட் தான், கேஎல் ராகுல் விமர்சனத்தில் உல்ட்டாவாக மாறிய வெங்கடேஷ் பிரசாத் – கலாய்க்கும் ரசிகர்கள்

Venkatesh prasad KL rahul
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் 2018க்குப்பின் தொடக்க வீரராக அதிரடியாக விளையாடிய அவர் ஒவ்வொரு சீசனுக்கும் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து விலைமதிப்பு மிக்க வீரராக உருவெடுத்தார். அதன் காரணமாக காயமடைந்த ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி 2019க்குப்பின் ரோகித் சர்மாவுடன் இந்திய அணியில் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்த அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதற்கிடையே ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்ட காரணத்தால் திறமையும் இளமையும் கொண்ட அவரை வருங்கால கேப்டனாக உருவாக்க தேர்வுக்குழு நினைத்தது. அதன் காரணமாக மதிப்பு இன்னும் அதிகரித்து 17 கோடி என்ற உச்சகட்ட ஐபிஎல் சம்பளத்தை பெற்ற அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் அணியின் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் தோல்விக்கு காரணமாகும் வகையில் விளையாடுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தனர்.

- Advertisement -

மாமனார் இம்பேக்ட்:
அதற்கேற்றார் போல் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கிடையே சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய அவர் முன்பை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் தடவல் நாயகன் என்று ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். அதன் உச்சகட்டமாக 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக வெறும் 136 ரன்களை சேசிங் செய்த போது 68 (61) ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை அதிரடியை துவங்காமல் ஆட்டமிழந்ததால் இறுதியில் லக்னோ 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அப்போது ரசிகர்களைப் போலவே முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் புள்ளி விவரங்களுடன் ட்விட்டரில் விடாமல் தொடர்ந்து 2 – 3 வாரங்கள் மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் அளவுக்கு விமர்சித்தார். குறிப்பாக 4 வருடங்களாக தொடர் வாய்ப்புகள் பெற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 பேட்டிங் சராசரியை கூட வைத்திருக்காத நீங்கள் இன்னும் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத் உங்களால் சர்பராஸ் கான் போன்ற இளம் வீரரின் கேரியர் கெடுவதாக வெளிப்படையாக தாக்கினார்.

- Advertisement -

மேலும் உங்களை விட அஸ்வின் துணை கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர் என்றும் விமர்சித்த அவர் ஃபார்மை மீட்டெடுக்க புஜாரா போல உள்ளூர் தொடரில் விளையாட முடியுமா? என்ற சவாலையும் வைத்தார். அந்த நிலையில் ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறிய ராகுல் தற்போது குணமடைந்து 2023 ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக தேர்வாகியுள்ளார். இந்நிலையில் கேஎல் ராகுல் திருமணம் செய்து கொண்டுள்ள அதியா செட்டியின் தந்தையான பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியுடன் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருக்கும் சுவாமி நாராயணன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ததாக வெங்கடேஷ் பிரசாத் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக என்னை போன்ற விமர்சகர்களை அமைதிப்படுத்தும் அளவுக்கு கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பிராத்தனை செய்ததாக கூறும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நியூ ஜெர்ஸியில் இருக்கும் சுவாமி நாராயணன் கோவிலுக்கு அண்ணாவுடன் சென்றேன். அங்கே இந்தியர்கள் மற்றும் உலகக்கோப்பையில் இந்தியா சிறப்பாக செயல்படுவதற்காக பிரார்த்தனை செய்தேன். மேலும் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு என்னை போன்ற விமர்சகர்களை கேஎல் ராகுல் அமைதிப்படுத்த வேண்டுமென ரகசியமாக பிரார்த்தனை செய்து கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:PAK vs AFG : பாபர் அசாமை டக் அவுட்டாக்கி மாஸ் பிளானை தூளாக்கிய ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தானை சுருட்டி அசத்தல் பவுலிங்

இருப்பினும் கோவிலுக்கு சென்றோம் என்று சொல்லிவிட்டு விமானத்துக்குள் இருக்கும் வெங்கடேஷ் பிரசாத்தை பார்க்கும் ரசிகர்கள் கேஎல் ராகுலை விமர்சிக்க வேண்டாமென சுனில் செட்டி கேட்டுக் கொண்டதற்காக சரணடைந்து விட்டீர்களா? என கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக 50 கோடிக்கு மேல் ராகுலுக்கு சீதனம் கொடுத்த சுனில் செட்டி உச்சகட்டமாக விமர்சித்த பிரசாத்தை அமைதிப்படுத்தியிருக்க மாட்டாரா என்றும் ரசிகர்கள் கலாய்கின்றனர்.

Advertisement