PAK vs AFG : பாபர் அசாமை டக் அவுட்டாக்கி மாஸ் பிளானை தூளாக்கிய ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தானை சுருட்டி அசத்தல் பவுலிங்

Babar Rasid khan
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை நடைபெறுகிறது. அதற்கு தயாராகும் வகையில் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தானில் துவங்குகிறது. அந்த நிலையில் இந்த 2 தொடர்களிலும் சிறப்பாக செயல்படுவதற்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் துவங்கியுள்ளது. முன்னதாக கடந்த ஆசியக் கோப்பையில் சார்ஜாவில் மோதிய போது அடித்துக் கொள்ளாத குறையாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மோதிக் கொண்டனர்.

அதில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் ரசிகர்களை மைதானத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் அடித்து நொறுக்கினர். அந்த நிலைமையில் அடுத்த சில மாதங்களுக்கு முன் அதே துபாயில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் வென்று பாகிஸ்தானை பழி தீர்த்து ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்தது. அந்த வகையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக புதிய பரம எதிரியாக உருவாகியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக இப்போது தான் ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது.

- Advertisement -

மாஸ் காட்டிய ஆப்கானிஸ்தான்:
அந்த சூழ்நிலையில் ஆசிய கோப்பையின் பெரும்பாலான போட்டிகள் இலங்கையில் நடைபெறுவதால் அதற்கு தயாராகும் திட்டத்துடன் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 2023 இலங்கை பிரீமியர் லீக் டி20 தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளையாடி சதமடித்து நல்ல செயல்பாடுகளையே வெளிப்படுத்தினார். எனவே இந்த தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி ஹம்பன்தோட்டாவில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே பகார் ஜமான் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்ததாக வந்த கேப்டன் பாபர் அசாம் 3வது ஓவரில் முஜீப் உர் ரஹ்மான் சுழலில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். குறிப்பாக இலங்கை பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை 1 ரன் கூட அடிக்க விடாமல் அவுட்டாகிய முஜீப் ரஹ்மான் அடுத்ததாக வந்த முகமது ரிஸ்வானையும் 21 (22) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து வந்த சல்மான் ஆஹா 7 (29) இப்திகார் அகமது 30 (41) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக போராடிய மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 61 (94) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதியில் சடாப் கான் 39 (50) ரன்கள் எடுத்தும் முழுமையாக 50 ஓவர்கள் வரை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாகிஸ்தான் 47.1 ஓவேரிலேயே 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்தளவுக்கு சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் அட்டகாசமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரகுமான் 3 விக்கெட்கள், ரஷித் கான் மற்றும் முகபது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அப்படி தங்களுடைய பலமான சுழல் பந்து வீச்சை வைத்து பாகிஸ்தானை 50 ஓவர்கள் முழுமையாக கூட விளையாட ஆப்கானிஸ்தான் கட்டுப்படுத்தியது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்க:கனவுல கூட இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நான் நெனைக்கல – திலக் வர்மா நெகிழ்ச்சி

அதை தொடர்ந்து 202 என்ற இலக்கை எடுத்து இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் போராடி வருகிறது. மறுபுறம் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நசீம் ஷா ஆகிய தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் முதல் போட்டியிலேயே அவமான தோல்வியை தவிர்ப்பதற்காக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement