கனவுல கூட இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நான் நெனைக்கல – திலக் வர்மா நெகிழ்ச்சி

Tilak-Varma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 20 வயதான திலக் வர்மாவிற்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான திலக் வர்மா ஒரு அரை சதம் உட்பட 173 ரன்கள் குவித்து அசத்தினார்.

Tilak-Varma-1

- Advertisement -

அதிலும் இரண்டு முறை அவர் அந்த தொடரில் நாட் அவுட்டாக இருந்து போட்டியை முடித்து கொடுத்து சிறந்த பேட்ஸ்மேன் திறனையும் வெளிக்காட்டி இருந்தார். இந்நிலையில் அந்த தொடரை அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடி வரும் திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அடுத்ததாக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது இந்த சேர்க்கை அணிக்கு பலம் தரும் வகையில் அமைந்துள்ளது என கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tilak-and-SKY

இவ்வேளையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாவது குறித்து பேசியுள்ள திலக் வர்மா நெகிழ்ச்சியான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

- Advertisement -

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கனவு என்னுள் இருந்து வந்தது. ஏற்கனவே நான் உள்ளூர் கிரிக்கெட்டில் 50 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளதால் இம்முறை டி20 கிரிக்கெட்டை போன்று நிச்சயம் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவேன் என திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2023 உ.கோ : யார் ஜெயிப்பாங்கன்னு சொல்ல முடியாது ஆனா அவர் ஃபைனலில் அவங்க இருப்பாங்க – மெக்கல்லம் நிதர்சன கணிப்பு

திலக் வர்மாவின் சேர்க்கை குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறுகையில் : திலக் வர்மாவிடம் இருந்து நாங்கள் நல்ல செயல்பாட்டை மட்டும் பார்க்கவில்லை. அவர் நல்ல மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடியதால் அவரை அணியில் இணைத்ததாக அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement