டி20 உலகக்கோப்பையை வெல்ல பாகிஸ்தான் டீம் போட்டுள்ள மாஸ்டர் பிளான் – பாக் ரசிகர்கள் மகிழ்ச்சி

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதற்காக அரபு நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனாகவும் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல சூப்பர் 4 சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது. ஆனால் பரம எதிரியான பாகிஸ்தான் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும் சூப்பர் 4 சுற்றில் அட்டகாசமாக செயல்பட்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிலும் ஷாஹீன் அப்ரிடி போன்ற முக்கிய வீரர் இல்லாமலேயே நல்ல நிலையை எட்டியுள்ள அந்த அணி விரைவில் நடைபெறும் டி20 உலக கோப்பையிலும் இதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் தங்களது அணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு அந்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் ஆலோசகராக செயல்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

மாஸ்டர் பிளான்:
பொதுவாக என்னதான் திறமை இருந்தாலும் உலக கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்வதற்கு அந்த தொடர் நடைபெறும் நாட்டில் நிலவும் கால சூழ்நிலைகளை அறிந்து அதற்கேற்றார்போல் உடனடியாக தங்களை உட்படுத்தி விளையாடுவதே வெற்றியின் முதல் படியாகும். அந்த வகையில் 2022 ஐசிசி டி20 உலககோப்பை நடைபெறும் ஆஸ்திரேலிய மண்ணில் உள்ள ஆடுகளங்கள் இயற்கையாகவே வேகம், பவுன்ஸ் போன்ற அம்சங்களுக்கு அதிகப்படியாக கைகொடுக்கும். அதனால் அந்த சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் விளையாடுவதற்கு தேவையான அணியை தேர்வு செய்வது அவசியமாகும்.

மேலும் பொதுவாகவே சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆசிய கண்டத்தில் விளையாட பழகிய இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் ஆஸ்திரேலியாவில் தடுமாறுவது வழக்கமான ஒன்றாகும். எனவே அந்த அம்சங்களில் உதவி புரிவதற்காகவே ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்தியூ ஹெய்டனை இந்த உலகக் கோப்பைக்காக ஸ்பெஷல் ஆலோசகராக நியமித்து பாகிஸ்தான் சிறப்பான முடிவெடுத்துள்ளது.

- Advertisement -

தரமான பாகிஸ்தான்:
முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் இவர் ஆலோசகராக செயல்பட்ட போதிலும் அரையிறுதி வரை சென்று பாகிஸ்தான் வெளியேறியது. ஆனாலும் இம்முறை உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காரணத்தால் கடந்த முறை தோல்வியடைந்தாலும் மீண்டும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பற்றி மேத்யூ ஹைடன் பேசியது பின்வருமாறு.

“ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை முன்னிட்டு பாகிஸ்தான் அணியுடன் ஆலோசகராக மீண்டும் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணியில் இணைவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை நான் பார்த்து வருகிறேன். குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான வெற்றி அபாரமாக இருந்தது. அனேகமாக தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என 2 துறைகளிலும் ஆஸ்திரேலியாவில் நிலவும் கால சூழ்நிலைகள் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அது போக இந்த அணியில் அடிப்படைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் உலக கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார். இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராசா பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் உடையில் மேத்தியூ ஹைடனை மனதார வரவேற்கிறேன். அவர் உலகின் அனைத்து இடங்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்.

இதையும் படிங்க : சரியான பிராக்டீஸ் குடுங்க. அந்த பையன் பெரிய ஆளா வருவான். இந்திய இளம்வீரரை பாராட்டிய – சோயிப் அக்தர்

அது போக ஆஸ்திரேலியா கால சூழ் நிலைகளைப் பற்றி நன்கு தெரிந்துள்ள அவருடைய அனுபவம் எங்களுடைய வீரர்களுக்கு உலக கோப்பையையும் வருங்காலங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடர்களையும் வெல்வதற்கு உதவி புரியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். மேலும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தங்களது அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை பாகிஸ்தான் ரசிகர்களும் மனதார வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement