என்னய்யா சொல்றிங்க.. செமி ஃபைனல் கனவில் விழுந்த இடியால்.. வீட்டுக்கு பெட்டி படுக்கையை கட்டும் பாகிஸ்தான்?

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாராக விளையாடி குசால் பெரேரா 51, தீக்சனா 38 ரன்கள் எடுத்த உதவியுடன் 172 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 45, ரச்சின் 42, டார்ல் மிட்சேல் 43 ரன்கள் எடுத்து 23.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 10 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து 4வது இடத்தை பிடித்து செமி ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் செமி ஃபைனல் கனவில் இடி விழுந்துள்ளது.

- Advertisement -

கிளம்பும் பாகிஸ்தான்:
அதாவது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 8 போட்டிகளின் முடிவில் தலா 8 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 5, 6 ஆகிய இடங்களில் இருக்கிறது. அதில் ஆப்கானிஸ்தானை விட அதிக ரன் ரேட்டை கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பிருந்தாலும் அது அசாத்தியமாகியுள்ளது.

அதாவது இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் பாகிஸ்தான் குறைந்தபட்சம் 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூசிலாந்து பெற்றுள்ள ரன் ரேட்டை விட அதிக ரன் ரேட்டை பெற்று 4வது அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும். அல்லது இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் அந்த அணி நிர்ணயிக்கும் எவ்வளவு பெரிய இலக்கையும் பாகிஸ்தான் 2.2 ஓவர்களுக்குள் சேசிங் செய்து 284 பந்துகள் மீதம் வைத்து வென்றால் மட்டுமே இந்தியாவுடன் செமி ஃபைனலில் மோதுவதற்கு தகுதி பெற முடியும்.

- Advertisement -

எடுத்துக்காட்டாக இங்கிலாந்துக்கு எதிராக 300 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அல்லது இங்கிலாந்து 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் அதை பாகிஸ்தான் 2.2 ஓவர்களில் வெற்றிகரமாக சேசிங் செய்ய வேண்டும். இது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்வதற்கு வாய்ப்புள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் என்னய்யா சொல்றிங்க என்ற ரியாக்சனுடன் சோகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: அது மட்டும் நடக்காம போயிருந்தா.. 300 ரன்ஸ் அடிச்சு நியூஸிலாந்தை தோற்கடிச்சுருப்போம்.. இலங்கை கேப்டன் பேட்டி

ஏனெனில் இரண்டுமே அதுவும் பாகிஸ்தான் தற்போது இருக்கும் ஃபார்முக்கு சாத்தியமில்லை என்பது அனைவருக்குமே தெரியும். அதனால் 1992 உலகக் கோப்பையை வென்று இந்தியர்களுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்த பாகிஸ்தான் அணியினர் தற்போது இங்கிலாந்து போட்டிக்கு முன்பாகவே நாட்டுக்கு திரும்புவதற்காக பெட்டி படுக்கையை கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement