18 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீராங்கனை – எதற்கு தெரியுமா?

Ayesha-Naseem
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவது என்பது எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும், வீராங்கனைகளுக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில் மிக இளம் வயதில் சர்வதேச அணிக்காக அறிமுகமாகினால் விரைவிலேயே அவர்கள் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் என்பதனால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதை அனைவரும் விரும்பி விளையாடி வருகிறார்கள்.

Ayesha-Naseem-1

- Advertisement -

மேலும் ஒரு கட்டத்தில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு அறிவித்து அதன் பின்னரும் கிரிக்கெட் தொடர்பான பணிகளிலேயே ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பாகிஸ்தான் மகளிர் அணியை சேர்ந்த 18 வயது வீராங்கனை ஆயிஷா நஸீம் தனது கரியரின் ஆரம்பத்திலேயே நல்ல நிலையில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிய அவர் இதுவரை அவர் நான்கு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடு இருந்தாலும் டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரராக 30 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் அவர் 20 பந்துகளில் நான்கு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 44 ரன்கள் குவித்து அதிரடி காட்டி இருந்தார்.

Ayesha-Naseem-2

டி20 கிரிக்கெட்டில் அதிரடியான வீராங்கனையாக பார்க்கப்படும் ஆயிஷா நஸீம் தற்போது தனது 18 வது வயதிலேயே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய அவர் டக் அவுட் ஆகியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் மகளிர் அணியானது அடுத்த மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ள வேளையில் தற்போது அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது ஓய்வு முடிவை கடிதம் மூலமாக அளித்துள்ளார். அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது : நாம் நான் இஸ்லாம் மத வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : உங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் சொல்லுவீங்களா? சௌரவ் கங்குலிக்கு வக்கார் யூனிஸ் பதிலடி – காரணம் இதோ

இதன் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவும் முடிவு செய்துள்ளேன். என்னுடைய இந்த கடிதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு அந்த கடிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவு அந்நாட்டு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement