உங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் சொல்லுவீங்களா? சௌரவ் கங்குலிக்கு வக்கார் யூனிஸ் பதிலடி – காரணம் இதோ

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 உலக கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கு நிகராக அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று காலம் காலமாக வைத்து வரும் கௌரவத்தை இந்தியா சொந்த மண்ணில் காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் 1992 முதல் இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பைகளை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தொடர்ந்து தோற்கடித்துள்ள இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. மறுபுறம் அதன் காரணமாக கிண்டல்களை சந்தித்து வரும் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் வரலாற்றில் சந்தித்த அனைத்து தோல்விகளுக்கும் இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வக்கார் யூனிஸ் பதிலடி:
இவை அனைத்தையும் தாண்டி ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக இருக்கும் இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை நிறுத்தி விட்டன. அதன் காரணமாக இப்போதெல்லாம் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை பார்ப்பதற்கு அனைவரும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி இவ்விரு நாடுகள் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரசித்தி பெற்றதாக உருவெடுத்துள்ளது.

ஆனால் அப்படி எதிர்பார்ப்பின் அடிப்படையில் மட்டுமே அந்தப் போட்டி பெரிதாக இருப்பதாக தெரிவித்த முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு தலைபட்சமாக வென்று வருவதால் அதில் தரமில்லை என்று கூறினார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் போட்டியே இந்த தொடரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் எப்போதுமே எதிர்பார்ப்பில் மட்டுமல்லாமல் தரத்திலும் உயர்ந்தது தான் என்று முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் துபாயில் டி20 உலக கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த போட்டி கூட ஒருதலைபட்சமாகவே இருந்ததாக தெரிவிக்கும் அவர் வாய்க்கு வந்ததை போல் பேச வேண்டாமென கங்குலிக்கு பதிலளித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடைய கருத்துக்கு நான் எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நாம் எப்போதுமே நல்ல போட்டிகளையே பார்க்கிறோம் என்பதே என்னுடைய கருத்தாகும்”

Waqar-Younis

“மேலும் 2021 டி20 உலக கோப்பையில் வென்ற போட்டி கூட ஒருதலைபட்சமாகவே இருந்தது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் தோல்வியை சந்தித்த பெரும்பாலான போட்டிகளில் வெற்றியை மிகவும் நெருங்கி வந்தோம். அந்த வகையில் உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் இந்த உலகிலேயே மிகவும் பெரியது. அப்படி போட்டியின் அளவு பெரிதாக இருக்கும் போது அதைப்பற்றி யார் எந்த கருத்து தெரிவித்தாலும் அது முக்கியமல்ல” என்று கூறினார்.

இதையும் படிங்க:எப்போவுமே விராட் கோலி மகத்தான சச்சினுக்கு கீழே தான், வேணும்னா மியாண்தத்துடன் கம்பேர் பண்ணலாம் – வெ.இ ஜாம்பவான் பாராட்டு

இந்த நிலையில் 2023 ஆசிய கோப்பை நடைபெறுவதால் அதில் லீக் மற்றும் சூப்பர் 4 என குறைந்தது 2 போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஃபைனலுக்கு வலுவான அந்த 2 அணிகளும் தகுதி பெற்றால் ஆசிய மற்றும் உலக கோப்பைகளை சேர்த்து இந்த வருடம் மட்டும் இந்தியா – பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடுவதை ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement