PAK vs SL : உண்மைய சொல்லனும்னா கொஞ்சம் வலிச்சது. கொஞ்சம் ஆக்ட் பண்ணேன் – உண்மையை ஒப்புக்கொண்ட ரிஸ்வான்

Rizwan
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்து தொடரில் தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலுல் வெற்றி பெற்று இந்த உலககோப்பை தொடரினை அட்டகாசமாக துவங்கியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதல் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 345 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பெரிய இலக்கினை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது துவக்கத்திலேயே இமாம் உல் ஹக் (12) மற்றும் பாபர் அசாம் (10) ஆகியோரது விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்காரணமாக 37 ரன்களிலேயே 2 விக்கெட்டை இழந்ததால் எப்படி பாகிஸ்தான் சேஸ் செய்யப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது.

- Advertisement -

அவ்வேளையில் அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இவர்கள் மிடில் ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவே மூன்றாவது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். துவக்க வீரரான அப்துல்லா ஷபிக் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் முகமது ரிஸ்வான் தனி ஆளாக மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு போராடினார்.

ஷபிக் ஆட்டமிழந்து வெளியேறியதும் சவுத் ஷாக்கில் 31 ரன்கள் குவித்து அவரும் ஆட்டமிழக்க இப்திகார் அகமதுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 131 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை அற்புதமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பேட்டிங் குறித்து பேசிய ரிஸ்வான் கூறுகையில் :

- Advertisement -

எப்பொழுதுமே நமது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது நாம் பெருமை கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த போட்டியில் நான் எனது அணியின் வெற்றிக்கு பங்காற்றியதை நினைத்து பெருமை கொள்கிறேன். இப்போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தை இல்லை அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் சற்று வித்தியாசமாகவே இருந்தது. இருந்தாலும் நாங்கள் பந்து வீசி முடித்த பின்னர் சேசிங்கிற்கு முன்பாக எங்களால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்திருந்தோம்.

இதையும் படிங்க : PAK vs SL : பர்ஸ்ட் 20-30 ஓவர்ல நாங்க கேம்லயே இல்ல.. வெற்றிக்கு பின்னர் இலங்கை வீரரை – பாராட்டிய பாபர் அசாம்

ஆனால் துவக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட் இழந்ததும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த மைதானம் பேட்டிங் சாதகமாக இருந்ததால் அப்துல்லா ஷபிக்கிடம் நாம் ஒவ்வொரு படியாக சேசிங்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறி அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தேன். போட்டியின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் என முகமது ரிஸ்வான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement