PAK vs SL : பர்ஸ்ட் 20-30 ஓவர்ல நாங்க கேம்லயே இல்ல.. வெற்றிக்கு பின்னர் இலங்கை வீரரை – பாராட்டிய பாபர் அசாம்

Babar-Azam
- Advertisement -

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது முக்கியமான ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தலான துவக்கத்தை கண்டுள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி குசால் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா ஆகியோரது சிறப்பான சதம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் 113 ரன்களையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 131 ரன்கள் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது அணி சார்பாக விளையாடிய அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக அப்துல்லா ஷபிக் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அமைத்த பாட்னர்ஷிப் இலங்கை அணியின் மீது அழுத்தத்தை அளித்தது.

- Advertisement -

இந்த போட்டியின் ஆரம்பத்தில் முதல் 20-30 ஓவர்களில் நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை. அந்த அளவிற்கு குசால் மெண்டிஸ் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியில் நாங்கள் பார்த்தோம். ஆனாலும் இறுதியில் நாங்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதாக நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோன்று பேட்டிங்கில் அப்துல்லா ஷபிக் விளையாடிய விதம் மிக அருமையாக இருந்தது. அவர் தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : PAK vs SL : எங்க பவுலிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா அந்த 2 விஷயத்துல சொதப்பிட்டோம்.. கேப்டன் சனாகா வருத்தம்

நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் உள்ளது. வலைப்பயிற்சியின் போது அவரது ஆட்டத்தை பார்த்து தான் இன்றைய போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ரிஸ்வான் மற்றும் ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் எங்களது அணியின் வெற்றிக்கு உதவியது. எப்போதுமே பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்புவன் நான். அதோடு ஹைதராபாத் ரசிகர்கள் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் கடந்த ஒரு வாரத்திற்கும் நெருக்கமாக எங்களை அவர்கள் தொடர்ச்சியாக ஆதரித்ததற்கு நன்றி என பாபர் அசாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement