- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்த செத்து போன மேட்ச பார்க்கவா 24 வருடம் வெய்ட் பண்ணோம்! பல்ப் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டு மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. அதன்பின் கடந்த 24 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் அந்நாட்டுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது.

அப்படிப்பட்ட நிலையில் இப்போது பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடும் இந்த தொடருக்கு கடந்த சில மாதங்களாகவே உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பட் கமின்ஸ் என இரு நாட்டைச் சேர்ந்த அணிகளிலும் பல உலகத்தரமான வீரர்கள் இருந்ததால் இந்த டெஸ்ட் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

தார் ரோட் பிட்ச் – ஏமாந்த உலக ரசிகர்கள்:
ஆனால் அந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு இறுதியில் ஏமாற்றத்தில் தான் முடிந்தது என்று கூற வேண்டும். ஆம் கடந்த மார்ச் 4இல் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் துவங்கிய இந்தப் போட்டி இன்றுடன் 5 நாட்கள் முடிவடைந்த போதிலும் கடைசி வரை முடிவு கிடைக்காமல் டிராவில் முடிந்தது பலரையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் இப்போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த மோசமான பிட்ச் தான் இதற்கு மிக மிக முக்கிய காரணமாகும். ஆம் இப்போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த தார் ரோடு போன்ற பிட்சில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

கதறிய பவுலர்கள்:
இதை அடுத்து தனது பேட்டிங்கை துவக்கிய பாகிஸ்தான் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கதறகதற கருணையே இல்லாமல் அடித்து முதல் இன்னிங்சில் 476/4 ரன்கள் குவித்திருந்த போது டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக அசார் அலி 185 ரன்கள், இமாம்-உல்-ஹக் 157 ரன்களும் விளாசினர். அதற்காக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒன்றும் தங்களது ஆகாய சூர திறமையால் இவ்வளவு ரன்களை குவித்தார்கள் என நினைக்க வேண்டாம். ஏனெனில் தார் ரோடு போன்ற இருந்த பிட்ச்சில் மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. பட் கமின்ஸ், நாதன் லயன், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் மட்டும் அதிகபட்சமாக தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். மேலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய 9 ஆஸ்திரேலிய பவுலர்கள் களமிறக்கப்பட்டார்கள் என்றால் பிட்ச் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள்.

இதை அடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானுக்கு சவால் விடும் வண்ணம் அந்த மோசமான பிட்சில் ரன்களை குவித்தது. அந்த அணியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 97 ரன்கள், மார்னஸ் லபுஸ்ஷேன் 90 ரன்கள், டேவிட் வார்னர் 68 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 78 ரன்கள் போன்ற முக்கிய வீரர்கள் தேவையான ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 459 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் சொந்த மண்ணில் நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு பெற்ற நியூமன் அலி 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

செத்து போன பிட்ச்:
இரு அணிகளும் தங்களின் முதல் இன்னிங்சை முடிப்பதற்குள் 4 நாட்கள் முடிந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இடையில் மழை வேறு குறுக்கிட்டதால் இன்று நடந்த கடைசி 5வது நாளில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் மீண்டும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை கருணையே இல்லாமல் வெளுத்து வாங்கியது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் அசாத் ஷபிக் 136* ரன்கள் இமாம்-உல்-ஹக் 111* ரன்கள் என அடுத்தடுத்து சதம் அடிக்க பாகிஸ்தான் 252/0 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது 5வது நாள் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த போட்டி ஒருவழியாக டிராவில் முடிந்தது.

ஆனால் இந்த போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச் உலகம் முழுவதிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பொதுவாகவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கூட 5வது நாளில் பிட்ச் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இங்கே 5வது நாளில் அதுவும் கடைசி இன்னிங்சில் பாகிஸ்தானின் 2 தொடக்க வீரர்களும் சதம் அடித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

சர்ச்சையில் பாகிஸ்தான்:

இந்த போட்டியில் பந்து வீசிய இரு அணிகளைச் சேர்ந்த பந்து வீச்சாளர்களின் நிலைமை உண்மையாகவே அதோகதியாக இருந்தது என்றே கூற வேண்டும். “இது ஒரு இறந்து போன விக்கெட் (பிட்ச்)” என இந்த போட்டியில் விளையாடிதை பற்றி 78 எடுத்த உலகின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் போட்டியின் முடிவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மொத்தத்தில் இந்தப் போட்டியில் 379.1 ஓவர்கள் வீசப்பட்டதில் 1187 ரன்களை பேட்ஸ்மேன்கள் விளாசினார். ஆனால் பந்துவீச்சாளர்கள் வெறும் 14 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தனர்.

இந்த போட்டியை பற்றி இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில்.”சமீப காலங்களாக 4 நாட்களுக்குள் டெஸ்ட் போட்டிகள் முடிந்த போதிலும் மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்படும் போட்டிகளுக்கு மத்தியில் இது மிகவும் கடுப்பாக உள்ளது. மெதுவாக பந்து வீசுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் அச்சுறுத்தல் கிடையாது. ஒரு போட்டி 5 நாட்கள் முடிந்த பின்னும் டிராவில் முடிவதே உண்மையான அச்சுறுத்தலாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் உண்மையான அச்சுறுத்தல் என்பது மோசமான பிட்ச்களாகும். இறந்துபோன பிட்ச் = இறந்துபோன போட்டி” என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது மட்டுமல்லாமல் பல கிரிக்கெட் வல்லுனர்களும் ராவல்பிண்டி மைதானம் பற்றி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க : இனி இந்திய அணியில் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பே குடுக்க கூடாது – ரசிகர்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு

இதையடுத்து இந்த மைதானத்தை பற்றி ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இப்படி ஒரு மோசமான போட்டியை பார்ப்பதற்காகவா 24 வருடங்கள் காத்திருந்தோம் என்ற ஏமாற்றத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் காணப்படுகிறார்கள். மேலும் தார் ரோட் போன்ற மைதானத்தை உருவாக்கி ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் டார்ச்சர் செய்துவிட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் இது பற்றி விமர்சனம் செய்கின்றன.

- Advertisement -
Published by