இந்திய அணிக்கு எதிராக பாபர் அசாம் எடுத்த அந்த முடிவு தவறானது. அவர் பதவி விலக வேண்டும் – ரசிகர்கள் கோபம்

Babar-Azam
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் முக்கியமான லீக் சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 159 ரன்களை குவிக்கவே பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியானது துவக்கத்தில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதிவரை போராடி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

Ashwin-and-Kohli

- Advertisement -

இந்நிலையில் அந்த போட்டியில் பாபர் அசாம் செய்த சில தவறுகளே பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என்றும் அதனால் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றதிலிருந்து பாபர் அசாமின் பேட்டிங்கில் பெரிய சரிவு உள்ளது அதோடு முக்கியமான இந்த இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் ட்க் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கேப்டனாக அவர் மாறுவதற்கு முன்னர் மிகச் சிறப்பான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தி வந்த வேளையில் தற்போது தொடர்ச்சியாக முக்கிய போட்டிகளில் சொதப்பி வருகிறார். அதுமட்டும் இன்றி கேப்டன் பதவியில் குறுகிய அனுபவமே உடைய பாபர் அசாம் அணியில் உள்ள சீனியர் வீரர்களிடம் இக்கட்டான சூழ்நிலையில் நெருக்கடியான வேலைகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும் அப்படி செய்தால் தான் அது ஒரு நல்ல முடிவை தரும்.

Nawaz

ஆனால் சீனியர்களிடம் சென்று பேசாமல் தானே முடிவெடுப்பதனால் பாகிஸ்தான் அணிக்கும் அது சறுக்களை தருகிறது. மேலும் இந்திய அணிக்கு எதிராக பவுலர்களை பயன்படுத்தியதில் பாபர் அசாம் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார். ஏனெனில் கோலி களத்தில் இருக்கும் போது அவர் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று முன்கூட்டியே வேகப்பந்து வீச்சாளர்களை பந்துவீசி முடிக்க வைத்து விட்டார்.

- Advertisement -

அதனால் வேறுவழியின்றி கடைசி ஓவர் முகமது நவாஸிடம் கொடுக்க வேண்டியதாயிற்று கட்டாயம் கடைசி ஓவரில் முகமது நவாசை தவிர வேறுயெந்த வேகப்பந்து வீச்சாளர் வீசி இருந்தாலும் 16 ரன்களை கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது. இப்படி சிறிய சிறிய தவறுகளை ஒரு கேப்டனாக பாபர் அசாம் செய்ததால் பெரிய போட்டியில் கைக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு நழுவி விட்டதாகவும் அதனால் அவர் கேப்டன் பதவியை ராஜினார் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : நான் சொன்னதை அஷ்வின் கேக்கவே இல்ல. அவருக்கு ரொம்பவே தைரியம் அதிகம் – அஷ்வினை பாராட்டிய கோலி

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் மிகப்பெரிய வீரராக வரவேண்டும் என்றால் விராட் கோலி எப்படி கேப்டன்ஷிப்பில் இருந்து வெளியேறி தற்போது முழுநேர பேட்ஸ்மனாக விளையாடி வருகிறாரோ அதேபோன்று பாபர் அசாமும் இனி முழுநேர பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement