நான் சொன்னதை அஷ்வின் கேக்கவே இல்ல. அவருக்கு ரொம்பவே தைரியம் அதிகம் – அஷ்வினை பாராட்டிய கோலி

Ashwin-and-Kohli
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியானது இறுதி ஓவர் வரை அனல்பறக்க நடந்து ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தையே படைத்தது என்று கூறலாம். இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் என இரண்டுமே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடைசி நிமிடம் வரை போட்டி யாருடைய கையில் என்பது தெரியாமல் மிகச் சிறப்பான பொழுதுபோக்கினை அளித்து கடைசி பந்தில் இந்திய அணி வெற்றியும் பெற்றது.

Ravichandra Ashwin

- Advertisement -

இந்த போட்டியின் கடைசி பந்தில் களமிறங்கிய அஸ்வின் பவுண்டரி அடித்து வெற்றி உறுதி செய்திருந்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் வந்தவுடன் தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்போது ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய அஸ்வின் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே அவ்வளவு பரபரப்பான சூழ்நிலையும் மிக சாதாரணமாக கையாண்டு வொயிடு வாங்கினார்.

இதன் காரணமாக போட்டி சமநிலையில் இருக்கவே கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியும் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் அஸ்வின் வந்து களமிறங்கிய பின்னர் அந்த கடைசி பந்தில் என்ன நடந்தது என்பது குறித்த சுவாரசியமான தகவலை தற்போது விராட் கோலி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அஸ்வின் கடைசி பந்தினை எதிர் கொள்ள வரும்போது நான் அவரை பந்தை கவர் திசையில் தூக்கி அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓடி விடலாம் என்று கூறினேன்.

Ashwin

ஒரு ரன் ஓடினால் கூட போட்டி சமமாகும் என்பதனால் எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அவரை கவர் திசையில் பந்தை தூக்கி அடிக்குமாறு அறிவுரை கொடுத்தேன். ஆனால் அஸ்வின் நான் சொன்ன பேச்சை கேட்கவில்லை அந்த நெருக்கடியான நேரத்தில் கூட அவர் பந்து வைடாகத்தான் செல்கிறது என்று கூலாக வொயிடு வாங்கினார். அவரது அந்த செயல் உண்மையிலேயே தைரியமான விஷயமாகும்.

- Advertisement -

அப்போது போட்டி சமன் அடைந்ததால் கடைசி பந்திலாவது அவர் கவர் திசையில் அடிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் நினைத்ததற்கு நேர்மறையாக சர்க்கிளுக்கு வெளியே தூக்கி அடித்தார். அஸ்வினுக்கு உள்ள கிரிக்கெட் மூளை கூடுதல் என்பது இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம் என விராட் கோலி அஸ்வினை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 7 சிக்ஸர் நாயகர்கள்

ஏற்கனவே தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் ஆகி வெளியேறி இருந்ததால் அஸ்வின் கையிலே வெற்றி இருக்க பவுண்டரி அடித்து அற்புதமாக போட்டியை முடித்துக் கொடுத்த அஸ்வினுக்கு தினேஷ் கார்த்திக் “என்னை காப்பாற்றி விட்டாய்” என நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement