டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 7 சிக்ஸர் நாயகர்கள்

Gayle
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே டி20 கிரிக்கெட் என்றாலே அதில் ஓவருக்கு ஓவர் எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுக்கு பஞ்சமிருக்காது என்பதாலேயே ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. அப்படி அனைவரது அபிமான கிரிக்கெட்டாக கருதப்படும் டி20 போட்டிகளில் விக்கெட்டுக்கள் எடுக்கும் பவுலர்களை விட அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து ரன் மழை பொழியும் பேட்ஸ்மேன்களையே ரசிகர்கள் அதிகமாக விரும்புவார்கள்.

MS Dhoni Virat Kohli

- Advertisement -

அதிலும் குறிப்பாக அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்க விட்டு தங்களுக்கு வானவேடிக்கை நிகழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் முதன்மையான விருப்பமாக இருக்கும். ஆனால் தரையோடு தரையாக அடிப்பதற்குகே தடையாக வரும் உலகத் தரம் வாய்ந்த பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு பிரமாண்ட சிக்ஸர்களை பறக்க விடுவது பேட்ஸ்மேன்களுக்கு சவாலான காரியமாகும். அந்த வகையில் சவால்களை கடந்து ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

5. ஜோஸ் பட்லர் 26: இங்கிலாந்தின் லேட்டஸ்ட் அதிரடி நாயகனாக உருவெடுத்துள்ள இவர் 2012 முதல் இதுவரை பங்கேற்ற 22 போட்டிகளில் 26* சிக்சர்களை அடித்து டி20 உலக கோப்பையில் அதிக சிக்சர்களை அடித்த 5வது பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

Abd

4. ஏபி டிவில்லியர்ஸ் 30: டி20 கிரிக்கெட்டில் உருண்டு பிரண்டு படுத்துக்கொண்டு எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடித்து சிக்சர்களாக பறக்க விடும் திறமை பெற்ற இவர் 2017 – 2016 வரை களமிறங்கிய 29 இன்னிங்சில் 30 சிக்சர்களை அடித்து டி20 உலகக் கோப்பையில் அதிக ரசிகர்கள் அடித்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேனாகவும் 4வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

3. ஷேன் வாட்சன் 31: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான இவர் தன்னுடைய முரட்டுத்தனமான உடம்பை பயன்படுத்தி அசால்டாக சிக்சர்களை அடிக்கும் திறமை பெற்றவர் என்பதை அனைவரும் அறிவோம்.

Watson

அந்த வகையில் 2007 – 2016 வரை பங்கேற்ற 22 இன்னிங்ஸ்களில் 31 சிக்சர்களை பறக்க விட்ட அவர் டி20 உலக கோப்பையில் அதிக சிக்சர்களை அடித்த ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்து ஒட்டுமொத்த பட்டியலில் 3வது இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

3. டேவிட் வார்னர் 31: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர அதிரடி தொடக்க வீரரான இவர் 2009 முதல் இதுவரை விளையாடிய 32 இன்னிங்ஸில் 31* சிக்சர்களை அடித்து இந்தப் பட்டியலில் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த வருடம் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா முதல் முறையாக வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய இவர் இம்முறையும் விளையாடுவதால் இந்த சாதனை பட்டியலில் முன்னேற வாய்ப்புள்ளது.

ROhit Sharma Matthew Wade

3. ரோஹித் சர்மா 31: 2007 முதல் இப்போது வரை நடைபெற்ற அத்தனை டி20 உலகக் கோப்பைகளிலும் விளையாடும் ஒரே இந்திய வீரராக சாதனை படைத்துள்ள இவர் இதுவரை 31 இன்னிங்ஸ்சில் 31 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

பொதுவாகவே அசால்டாக சிக்சர்களை அடிக்கும் திறமை பெற்றுள்ள இவர் இம்முறை இந்தியாவின் கேப்டனாக விளையாடுவதால் இந்த சாதனை பட்டியலில் முன்னேற 100% வாய்ப்புள்ளது.

2. யுவராஜ் சிங் 33: இந்தியாவின் சிக்சர் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கடந்த 2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு படைத்த பிரமாண்ட உலக சாதனையை யாராலும் மறக்கவே முடியாது.

அந்த 6 சிக்சர்கள் உட்பட 2016 வரை 28 இன்னிங்சில் 33 சிக்ஸர்களை விளாசிய அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரராகவும் ஒட்டுமொத்த பட்டியலில் 2வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

gayle 1

1. கிறிஸ் கெயில் 63: டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று ரசிகர்களாலும் வல்லுனர்களாலும் போற்றப்படும் இவர் கடந்த 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்து சதமடித்து மிரட்டலான தொடக்கம் கொடுத்தார்.

அந்த வகையில் பொதுவாகவே தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை மகிழ்விக்க தவறாத அவர் 2021 வரை பங்கேற்ற 31 இன்னிங்ஸ்களில் 63 சிக்சர்களை பறக்க விட்டு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்துள்ளார். இந்தப் பட்டியலைப் பார்க்கும் போதே அவரை யாரும் அவ்வளவு எளிதில் தொட முடியாது என்பதையும் அவரது தரத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

Advertisement