- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விதிமுறை மீறிய ஓவல் கியூரேட்டரின் இரட்டை வேடம்.. இங்கிலாந்தை சாய்த்து இந்தியா பதிலடி கொடுக்குமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து விளையாடு ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் கடைசிப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்தியா தயாராக உள்ளது. அதற்கு முன்பாக ஓவல் மைதானத்தின் பிட்ச்சை இந்திய அணியினர் பார்வையிட விரும்பினார்கள்.

ஆனால் அதற்கு மைதானத்தின் பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக 2.5 மீட்டர் தொலைவிலிருந்து பிட்ச்சை பார்த்து விட்டு செல்லுங்கள் என்று அவர் இந்திய அணியினரிடம் கண்டிப்புடன் பேசியுள்ளார். அதுவே இங்கு விதிமுறை என்பதால் தூரத்தில் இருந்து பார்த்து விட்டு செல்லுங்கள் என்று அவர் இந்திய அணியினரிடம் கராராக பேசினார்.

- Advertisement -

இரட்டை வேடம்:

அதனால் கோபமடைந்த இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவருடன் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் இதே மைதானத்தில் 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் – லீ போர்ட்டிஸ் ஆகியோர் பிட்ச் மேலே நின்று கொண்டு பேசினார்கள்.

ஆனால் இந்திய பயிற்சியாளர்களை மட்டும் லீ போர்ட்டிஸ் பிட்ச்சை தொட்டுப் பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை. அதனால் இந்தியாவுக்கு ஒரு நியாயம் இங்கிலாந்துக்கு வேறு நியாயமா?என்று ஆகாஷ் சோப்ரா, இர்ஃபான் பதான் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ஓவல் மைதானத்திற்கு இங்கிலாந்து அணியினரும் வந்து பயிற்சிகளை மேற்கொண்டனர்.

- Advertisement -

இந்தியா பதிலடி கொடுக்குமா:

அங்கே கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோரை லீ போர்ட்டிஸ் சிரித்த முகத்துடன் வரவேற்றார். அவர்கள் அனைவரும் பிட்ச் விளிம்பு பகுதியின் மேலே நின்று பார்வையிட்டார்கள். அதன் உச்சமாக 5வது போட்டியில் இங்கிலாந்தை தலைமை தாங்கப் போகும் ஓலி போப் பேட்டிங் செய்யும் இடத்தில் சென்று பேட்டை வைத்து நிழல் பயிற்சி செய்து பார்த்தார்.

இதையும் படிங்க: இந்திய மிருகத்தை தூண்டி விட்டாங்க.. 5வது டெஸ்டில் இங்கிலாந்தை தோற்கடிக்க இதுவே போதும்.. அஸ்வின் பேட்டி

இருப்பினும் அதற்கு லீ போர்ட்டிஸ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால் அவரே 2.5 மீட்டர் விதிமுறையை தாண்டி இங்கிலாந்து வீரர்களை பிட்ச் மேலே நடக்க விட்டார். அந்த வகையில் விதிமுறையை மீறிய ஓவல் மைதான பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் இரட்டை வேடமாக போட்டு இந்திய அணிக்கு அநியாயத்தை செய்துள்ளார் என்றே சொல்லலாம். இதற்கு பதிலடியாக இங்கிலாந்தை வீழ்த்தி அவருக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -