இந்திய மிருகத்தை தூண்டி விட்டாங்க.. 5வது டெஸ்டில் இங்கிலாந்தை தோற்கடிக்க இதுவே போதும்.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது. அப்போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகியுள்ளது. அதற்கு முன்பாக ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தை பார்வையிட இந்திய அணியினர் முயற்சி செய்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் 2.5 மீட்டர் தொலைவிலிருந்து பார்த்து விட்டு செல்லுமாறு சொன்னார். அதனால் கோபமடைந்த இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் கையை நீட்டி வாக்குவாதம் செய்தார். இத்தனைக்கும் இதே மைதானப் பராமரிப்பாளர் இன்று இங்கிலாந்து அணியினரை பிட்ச் ஓரத்தின் மேலே நின்று பார்க்க அனுமதி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இரட்டை வேடம்:

சொல்லப்போனால் இங்கிலாந்து கேப்டன் ஓலி போப் பேட்டிங் செய்யும் இடத்திற்கு சென்று பேட்டை வைத்து நிழல் பயிற்சியும் செய்து பார்த்தார். அதற்கு மைதான பராமரிப்பாளர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதனால் இந்தியாவுக்கு ஒரு நியாயம்? இங்கிலாந்துக்கு வேறு நியாயமா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த செயல் இந்திய அணிக்குள் இருக்கும் மிருகத்தை அடுத்தப் போட்டியை வெல்ல தூண்டி விடும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “4வது போட்டியின் பரபரப்பான முடிவுக்கு பின், கௌதம் கம்பீர் – மைதான பராமரிப்பாளர் சண்டை வீடியோவை பார்த்த எனக்கு “பாஸ் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று சொல்லத் தோன்றியது”

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“நீங்கள் இந்த இந்திய அணிக்கு எதிராக இப்படி விளையாட விரும்பக்கூடாது. இந்திய அணிக்கு துன்பம் வரும் போது யாராவது எழுச்சி பெறுவார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். விஷயங்கள் சரியாக நடக்காத போது அல்லது நாங்கள் சுவரில் தள்ளப்படும் போது ​​இந்திய அணி ஒரு வித்தியாசமான மிருகமாக மாறுகிறது”

“இந்த குறிப்பிட்ட விஷயம் இந்திய அணிக்கு அடுத்தப் போட்டியில் தீவிரமான சாதகத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். இது போன்ற விஷயங்கள் நடைபெறும் போது இந்திய அணியில் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகங்கள், தனிப்பட்ட தரமான வீரர்கள் ஒன்றாக சேர்ந்து வருவதை பலமுறை பார்த்துள்ளேன்”

இதையும் படிங்க: 5 ஆவது போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? பத்திரிகையாளர் கேள்விக்கு – கேப்டன் கில் பதில்

“குறிப்பாக மங்கிகேட் சம்பவம் நடந்த போது அடுத்த டெஸ்டில் இந்தியா எப்படி விளையாடியது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். கபாவில் நடந்ததைப் பாருங்கள், 2021இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்ததைப் பாருங்கள். அங்கு விராட் கோலி இங்கிலாந்துக்கு 60 ஓவர்கள் நரகத்தைக் காட்ட வேண்டுமென்று கூறினார். அதே போலவே இதுவும் அணியை உற்சாகப்படுத்துகிறது” என்று கூறினார்.

Advertisement