ஐ.பி.எல் மட்டுமின்றி உலக அளவில் யாரும் படைக்காத இமாலய சாதனையை நிகழ்த்திய – விராட் கோலி

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 30-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு தைரியமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது அடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர் டு பிளிசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதனால் 11/1 என சுமாரான தொடக்கத்தைப் பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ரஜத் படிடார் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு நட்சத்திர தொடக்க வீரர் விராட் கோலி தனது அணிக்கு தேவையான ரன்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

RCB Faf Virat

- Advertisement -

இந்த வருடம் 41*, 12, 5, 48, 1, 12, 0, 0, 9 என பங்கேற்ற முதல் 9 போட்டிகளில் வெறும் 128 ரன்களை 16.00 என்ற மோசமான சராசரியில் எடுத்திருந்த அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி படுமோசமான பார்மில் தவித்து வருகிறார். இதனால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அவர் பார்முக்கு திரும்புவார் திரும்புவார் என எதிர்பார்த்து ஜாம்பவான்களும் ரசிகர்களும் ஓய்ந்து போய் விட்டார்கள். மேலும் அவரின் உடம்பிலும் ஆட்டத்திலும் கலைப்பு தெரிந்த காரணத்தால் ஃபார்முக்கு திரும்ப ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி 2 – 3 மாதங்கள் ஓய்வு எடுக்குமாறு ரவிசாஸ்திரி உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வந்தனர்.

எதிரணியினரே பாராட்டு:
அந்த அளவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தில் விளையாடினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொறுப்புடன் பேட்டிங் செய்த விராட் கோலி ராஜத் படிடார் உடன் ஜோடி சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார். ஒரு கட்டத்தில் அரை சதத்தை தொட்ட அவர் முதலில் வானத்தை நோக்கி பார்த்து அதன்பின் ரசிகர்களிடம் பேட்டி நீட்டி கொண்டாடினர். அப்போது மைதானத்தில் இருந்த அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ஆரவாரத்தில் துள்ளி குதித்து மகிழ்ச்சியுடன் கை தட்ட ஒட்டுமொத்த மைதானமும் ரசிகர்களின் கைதட்டலால் அதிர்ந்தது.

Virat Kohli vs GT

அதைவிட அந்த ஓவரை வீசிய மற்றொரு இந்திய வீரர் முகமது சமி விராட் கோலி போன்ற ஒருவர் இந்த கடினமான தருணத்தில் அடித்துள்ள இந்த முக்கியமான அரைசதத்தை பாராட்டும் வகையில் அவரின் தோள் மீது கை போட்டு தோழனுக்கு தோழனாக தட்டிக் கொடுத்து பாராட்டியது விராட் கோலியின் ரசிகர்களின் நெஞ்சங்களைக் தொட்டது. ஒரு வழியாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்ட விராட் கோலி தொடர் அழுத்தங்களால் சற்று பொறுமையுடன் பேட்டிங் செய்து 53 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 58 ரன்கள் எடுத்து ஷமியின் பந்தில் அவுட்டானார்.

- Advertisement -

பெங்களூரு 170 ரன்கள்:
அந்த நிலைமையில் விராட் கோலியுடன் கைகோர்த்து விளையாடிய இளம் வீரர் ரஜத் படிடார் 32 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மஹிபால் லோமரர் அதிரடியாக 16 (8) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு 170 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளையும் முகமது சமி, அல்சாரி ஜோசப், ரஷீத் கான், பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

கிங் ரிட்டர்ன்ஸ்:
இந்த இன்னிங்ஸ்சின் ஹைலைட்டாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அரை சதமடித்தது பல ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் நிம்மதி அடைய வைத்தது. குறிப்பாக முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் “ரிட்டன் ஆப் கிங்” என்று சமூகவலைதளத்தில் மனதார பாராட்டினார்.

இதையும் படிங்க : பிளே ஆப் வாய்ப்பே போயிடுச்சி. இனியாவது அவருக்கு சேன்ஸ் குடுங்க – இளம்வீரருக்கு சி.எஸ்.கே ரசிகர்கள் ஆதரவு

மேலும் அவர் அடித்தாலே அதில் ஒரு சாதனை இருக்கும் என்பதைப் போல் இப்போட்டியில் அரைசதம் கடந்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக 50 அரை சதங்கள் விளாசிய முதல் உலகளாவிய பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 50*, பெங்களூருவுக்காக
2. டேவிட் வார்னர் : 42, ஹைதெராபாத்துக்காக
3. சுரேஷ் ரெய்னா : 40, சென்னைக்காக

Advertisement