அவங்க சொல்றது உண்மை தான்.. இந்தியாவை தோற்கடிக்காம மற்ற யாராலும் 2023 உ.கோ ஜெயிக்க முடியும் – முன்னாள் பாக் கேப்டன் கருத்து

IND vs PAK World Cup
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாடுகின்றன.

அந்த உலக அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவாக செயல்படக்கூடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. அந்த நிலையில் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை தோற்கடித்து 8வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணியில் பும்ரா, கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

கில்லியாக இந்தியா:
மேலும் கில், கேப்டன் ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ் போன்றவர்களும் முக்கியமான சமயத்தில் ஃபார்முக்கு திரும்பி இந்திய அணிக்கு வலு சேர்கின்றனர். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா, டெஸ்ட், ஒருநாள் டி20 ஆகிய 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் ஒரே சமயத்தில் முதலிடம் பிடித்த முதல் ஆசிய அணி என்ற வரலாற்றை படைத்துள்ளது.

அதன் காரணமாக இந்தியாவை தோற்கடிக்காமல் மற்ற அணிகளால் 2023 உலகக்கோப்பை வெல்ல முடியாது என மைக்கேல் வாகன், டோமினிக் கோர்க் போன்ற சில முன்னாள் வெளிநாட்டு வீரர்கள் அதிரடியான கணிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “உலக கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமே அற்புதமான வளர்ச்சி கண்டுள்ளது”

- Advertisement -

“அடுத்து நடைபெறும் உலக கோப்பையில் அனைவரும் டாப் 4 அணிகளை பற்றி பேசுகின்றனர். இருப்பினும் இந்தியாவை தோற்கடிக்கும் அணியே உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் சிறந்த அணியாக இருக்கின்றனர். அவர்களுடைய பேட்டிங் முழுமையாகவும் பவுலிங் இந்த சூழ்நிலைகளில் அசத்தும் அளவுக்கு சிறப்பாகவும் இருக்கிறது. எனவே தாமாக சில தவறுகளை செய்யாமல் இருக்கும் வரை அவர்களை மற்ற அணிகளால் நெருங்க முடியாது”

இதையும் படிங்க: நாக் அவுட் சுற்றை தொடுவதே கஷ்டம் தான்.. காயத்தால் விலகிய முக்கிய வீரர்.. 2023 உ.கோ இலங்கை அணி அறிவிப்பு

“கடந்த இந்த வருடங்களாகவே அவர்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். குறிப்பாக 15 வருடங்களுக்கு முன்பை விட தற்போது அவர்களுடைய அணி ஃபிட்டாக இருக்கிறது. மேலும் ஃபீல்டிங் முதல் வர்ணையாளர்களுக்கு கொடுக்கப்படும் உடை மற்றும் கட்டமைப்பு வரை கிரிக்கெட்டில் இந்தியா டாப் இடத்தை எட்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement