தோனியின் அந்த முடிவு தான் அவரோட கேரியரை காப்பாத்திருக்கு – இந்திய வீரரை பாராட்டிய இயன் சேப்பல்

Ian Chappell
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – காவஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினர். இருப்பினும் பேட்டிங் துறையில் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தடுமாறிய போது ஆரம்பத்தில் அதிரடியாகவும் நேரம் செல்ல நிதானமாகவும் செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 120 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் என்று சொல்வதை விட நாக்பூர் பிட்ச் பற்றி விமர்சித்த ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கினார் என்றே சொல்லலாம்.

Rohit Sharma

- Advertisement -

ஏனெனில் அந்தளவுக்கு கடினமான பிட்ச்சில் தரமான இன்னிங்ஸ் விளையாடிய அவர் கடந்த 2013ஆம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் மிடில் ஆர்டரில் விளையாடி ரொம்பவே தடுமாறினார். கடந்த 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2012 வரை மிடில் ஆர்டரில் திண்டாடிய ரோகித் சர்மாவின் திறமையை உணர்ந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார். அதை இறுக்கமாக பிடித்துக் கொண்ட ரோகித் சர்மா நாளடைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதமடித்து உலக சாதனை படைத்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ஜாம்பவானாக அவதரித்தார்.

காப்பாற்றப்பட்ட கேரியர்:
அதனால் சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் வீரராக போற்றப்பட்ட அவருக்கு 2014லேயே டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தோனி ஓய்வு பெற்று விட்டதால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்திய அவர் 2019 உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்து உலக சாதனை படைத்ததால் இம்முறை யாருடைய ஆதரவுமின்றி டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

Rohith

அப்போதிலிருந்து டெஸ்ட் போட்டிகளிலும் ஜொலிக்கத் துவங்கிய அவர் 2021இல் வேகத்துக்கு சாதகமான லண்டன் ஓவல் மைதானத்திலும் தற்போது நாக்பூரில் சுழலுக்கு சாதகமான மைதானத்திலும் சதமடித்து தன்னை சிறந்த டெஸ்ட் வீரர் என்பதை நிரூபித்துள்ளார். மொத்தத்தில் 2013இல் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கிய தோனியின் முடிவு தான் இன்று அவர் இந்தளவுக்கு ஜொலிப்பதற்கு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் கடைசி வரை மிடில் ஆர்டரில் விளையாடியிருந்தால் ரோகித் சர்மா வீணாகியிருப்பார் என்று தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் தொடக்க வீரராக களமிறங்கியது அவருடைய டெஸ்ட் கேரியரை காப்பாற்றி விட்டதாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தொடக்க வீரராக களமிறங்கும் முடிவு ரோகித் சர்மாவின் டெஸ்ட் கேரியரை காப்பாற்றியது. இவ்வளவு திறமைகளை கொண்டுள்ள அவர் ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் விளையாடி தனது திறமைகளை வீணடிக்க தெரிந்தார். இருப்பினும் விராட் கோலிக்கு மேலே பேட்டிங் செய்ததால் முன்னாள் கேப்டனின் பிரபலத்தால் அவர் பயப்படாமல் இருந்தார். அதே போல் தற்போது ரோகித் சர்மா வகிக்கும் கேப்டன்ஷிப் பதவியும் அவருடைய மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது”

Ian Chappell Rohit Sharma

“ஒரு அணியை வழிநடத்த தேவையான ஒழுக்கம் அவருடைய பேட்டிங்கில் மற்றொரு நிலையை சேர்த்துள்ளது. மேலும் பிட்ச்சின் உண்மையான தன்மையை ரோகித் சர்மா தான் பார்வை படுத்தினார். அதில் அவர் ஒரு தலைசிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். அவரது தடுப்பாட்டத்தில் அவருடைய தன்னம்பிக்கை வெளிப்பட்டது. குறிப்பாக சுழலும் பிட்ச்சில் அவர் நிறைய ஷாட்களை வெளிகாட்டியது இந்த பிட்ச் விளையாடுவதற்கு அசாத்தியமற்றது அல்ல என்பதை காட்டியது”

இதையும் படிங்க: காதலர் தினமான இன்று 2 ஆம் திருமணம் செய்ய இருக்கும் ஹார்டிக் பாண்டியா – கல்யாணம் எங்க தெரியுமா?

“மேலும் ரோஹித் சர்மா தன்னுடைய பல்வேறு ஷாட்டுகளை மட்டும் காட்டாமல் சரியான நேரத்தில் சரியானவற்றை விளையாடி ஆஸ்திரேலிய பவுலர்களை கடுப்பேற்றினார். அத்துடன் இந்திய பிட்ச்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர் ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் எடுத்துக்காட்டினார். அவரைப் போலவே ரவீந்திர ஜடேஜாவும் நல்ல முன்னேற்றத்தை கண்டவராக உள்ளார்” என்று கூறினார்.

Advertisement