காதலர் தினமான இன்று 2 ஆம் திருமணம் செய்ய இருக்கும் ஹார்டிக் பாண்டியா – கல்யாணம் எங்க தெரியுமா?

Hardik Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் பாண்டியா தலைமையிலான இந்திய அணியே விளையாடும் என்று கூறப்பட்டு வரும் வேளையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வரும் பாண்டியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடாமல் ஓய்வில் உள்ளார்.

Hardik-Pandya

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தில் அவர் தனது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 2020-ஆம் ஆண்டு உலகெங்கிலும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது எளிமையான முறையில் கோர்ட்டில் வைத்து அவர் பாலிவுட் நடிகையான நட்டாஷா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதோடு 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற வேளையில் ஜூலை 30-ஆம் தேதி அவர்களுக்கு அகஸ்தியா என்ற அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்து ஏழு மாதம் கழித்து நீதிமன்றத்தில் வைத்து திருமணத்தை செய்து கொண்டனர்.

Natasha Stankovic

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தம்பதியினர் அந்த திருமண விழாவை பெரியதாக கொண்டாட முடியவில்லை. இந்த காரணத்தினால் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக பிரம்மாண்டமான முறையில் தங்களது திருமணத்தை நடத்த அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -

அதன்படி இன்று காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி உதய்ப்பூரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்கு ஹார்டிக் பாண்டியா மற்றும் நட்டாஷா ஆகியோர் தங்களது மகனுடன் வந்துள்ள புகைப்படங்களும் இணையத்தில் ஆகியுள்ளன. அதோடு இவர்களது இந்த திருமண விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறும் என்றும் இந்த திருமண விழாவில் மெஹந்தி, சங்கீத், ஹல்தி என பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன.

இதையும் படிங்க : சிறந்த ஐசிசி விருது வென்ற இளம் இந்திய வீரர் ஆனா இவரப்போய் பெஞ்சில் உட்கார வெச்சிருக்கீங்களே – ரசிகர்கள் ஆதங்கம்

அதோடு இவர்களது இந்த திருமணத்தில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இப்படி தனது மனைவியை மகன் முன்னால் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் ஹார்திக் பாண்டியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement