சிறந்த ஐசிசி விருது வென்ற இளம் இந்திய வீரர் ஆனா இவரப்போய் பெஞ்சில் உட்கார வெச்சிருக்கீங்களே – ரசிகர்கள் ஆதங்கம்

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்யும் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி அவர்களுக்கு மாதம் தோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஜனவரி மாதத்தில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான விருதை பெறுவதற்கு இந்தியாவின் சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் நியூஸிலாந்தின் டேவோன் கான்வே ஆகிய 3 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டார்கள். ஆனால் அந்த மூவரில் முகமது சிராஜ் மற்றும் டேவோன் கான்வே ஆகியோரை விட கடந்த மாதத்தில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் 2023 ஜனவரி மாதத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த வருடம் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் ஓரளவு நிலையான இடத்தை பிடித்த அவர் கடந்த ஜனவரியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சதமடித்து 207 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதை விட நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 208 (149) ரன்கள் விளாசிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

ஆனாலும் பெஞ்சில்:
மேலும் 40*, 112 என அந்தத் தொடர் முழுவதும் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் மொத்தமாக 360 ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பாகிஸ்தானின் பாபர் அசாம் உலக சாதனையும் சமன் செய்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 7, 11 என சொற்ப ரன்களில் அவுட்டானதால் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற விமர்சனங்களை சந்தித்த அவர் 3வது போட்டியில் அதிரடியான சதமடித்து 126* (63) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அப்படி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்த அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் முதல் முறையாக சதமடித்தார். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய இந்திய பேட்டிங் துறையின் வருங்கால சூப்பர் ஸ்டார் கிடைத்து விட்டதாக அவரை ரசிகர்கள் பாராட்ட துவங்கியுள்ளனர்.

- Advertisement -

அப்படி ஜனவரி மாதம் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் சுப்மன் கில் இந்த விருதை வென்று இந்தியாவுக்கு மற்றுமொரு பெருமை சேர்த்துள்ளார். ஆனால் இப்படி ஐசிசி விருது வெல்லும் அளவுக்கு உச்சகட்ட ஃபார்மில் ஜொலிக்கும் இளம் வீரரான அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக நல்ல பார்மில் இருக்கும் ஒருவருக்காக பெஞ்சில் அமர்ந்தால் கூட பரவாயில்லை. மாறாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சுமாராக செயல்பட்டு துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ள கேஎல் ராகுலுக்காக இவர் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார் என்பது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்து வருகிறது.

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்லயும் இப்போ அவர் மேட்ச் வின்னரா மாற்றிட்டாரு – இந்திய வீரரை புகழ்ந்த மார்க் வாக்

குறிப்பாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 20 ரன்களில் அவுட்டான ராகுல் சுமாராக செயல்பட்டும் இந்தியா வெற்றி பெற்று விட்ட காரணத்தால் டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் மீண்டும் வாய்ப்பு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதற்கு எதிராக ரசிகர்களுடன் சேர்ந்து வெங்கடேஷ் பிரசாத் சில முன்னாள் வீரர்கள் குரல் கொடுப்பது சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement