டெஸ்ட் கிரிக்கெட்லயும் இப்போ அவர் மேட்ச் வின்னரா மாற்றிட்டாரு – இந்திய வீரரை புகழ்ந்த மார்க் வாக்

Mark-Waugh
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS Steve SMith

- Advertisement -

இந்த போட்டியில் இரண்டு அணிகளை சேர்ந்த பேட்ஸ்மேன்களுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் பேட்டிங்கில் சற்று சவாலை சந்தித்த வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கும் பெரிய அளவில் உதவி இருந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் டெஸ்ட் கரியர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான மார்க் வாக் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவின் டெஸ்ட் கரியர் என்பது ஒரு ஆச்சரியமான கரியர். ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை சற்று குறைத்து மதிப்பிடப்பட்ட வீரராகவே இருந்தார்.

Rohit Sharma

ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் ஒரு மேட்ச் வின்னராக மாறியுள்ளார். தற்போது அவர் பேட்டிங் செய்து வரும் விதம் மிக அருமையாக உள்ளது. என்னை கேட்டால் அவர் அனைத்து ஃபார்மெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு சிறந்த வீரர் என்றே சொல்லுவேன். அவருடைய டெக்னிக் என்பது மிகவும் எளிமையான ஒன்றுதான். அதை வைத்தே அவர் ரன்களை எளிதாக அடிக்கிறார்.

- Advertisement -

முன்பு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மேட்ச் வின்னராக இருந்த அவர் தற்போது சிகப்பு பந்து கிரிக்கெட்டிலும் மேட்ச் வின்னராக மாறிவிட்டார். தற்போது எந்த ஷாட்டுகள் தேவையாக உள்ளது என்பதை உணர்ந்து அதை அவர் சரியாக விளையாடுகிறார். அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் சரி, இந்திய மண்ணிலும் சரி அவரது ஆட்டம் அற்புதமாக உள்ளது. தற்போது அவர் முழு பார்மில் உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இந்திய பவுலர்களில் நான் விளையாட கஷ்டப்பட்டது இவருக்கு எதிரா தான் – தினேஷ் கார்த்திக் வெளிப்படை

ஏனெனில் அவர் ஆட்டத்தின் போக்கை கணித்து வேகமாகவும் விளையாடுகிறார். அதே சமயத்தில் தேவைப்படும்போது சற்று நிதானமாகவும் விளையாடுகிறார் என ரோகித் சர்மா குறித்து மார்க் வாக் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ஆம் ஆண்டு வரை சுமாரான செயல்பாடுகளில் இருந்த ரோகித் சர்மா 2019-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக மாறிய பின்னர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement