இந்திய பவுலர்களில் நான் விளையாட கஷ்டப்பட்டது இவருக்கு எதிரா தான் – தினேஷ் கார்த்திக் வெளிப்படை

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களே காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர்கள் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முழுவதுமாக சுழற்பந்து வீச்சுக்கு கை கொடுத்த இந்த மைதானத்திலும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஆஸ்திரேலியா வீரர்களை தனது அற்புதமான பந்துவீச்சால் திணறடித்தார்.

இந்நிலையில் இந்த தொடரை வர்ணனை செய்து கொண்டிருக்கும் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் முகமது ஷமி குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அது குறித்து அவர் கூறுகையில் :

Shami

முகமது ஷமி குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு “டார்ச்சர்” ஏனென்றால் வலைப்பயிற்சியின் போது நான் எதிர்கொண்ட கடினமான ஒரே பவுலர் என்றால் அது ஷமி தான். அந்த அளவிற்கு அவர் நெட் ப்ராக்டீசின் போது எனக்கு எதிராக அபாயகரமாக பந்து வீசுவார்.

- Advertisement -

நான் மட்டும்தான் இப்படி நினைக்கிறேன் என்றால் அது கிடையாது. ஏனெனில் ரோகித் சர்மா, விராட் கோலி கூட முகமது ஷமிக்கு எதிராக விளையாடவே கூடாது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக பந்து வீசுவார். அதுமட்டுமின்றி கைகளை நேராக வைத்து டெலிவரி செய்யும் அவர் இயற்கையிலேயே 6 முதல் 8 மீட்டர் லென்ந்தில் தான் வீசுவார்.

இதையும் படிங்க : IND vs AUS : அடுத்தது என்ன டூப்ளிகேட் ஜடேஜாவா? 2வது போட்டிக்கு முன் ஆஸ்திரேலியாவை கலாய்த்த முகமது கைப் – காரணம் இதோ

அப்படி வீசுவதாலே அவருக்கு நிறைய ஸ்லிப் கேட்ச்கள், விக்கெட் கீப்பர் கேட்ச்கள் மூலம் விக்கெட்டுகள் கிடைக்கும். அதேவேளையில் நல்ல பவுன்ஸ் உள்ள பிட்ச்களில் அவரது பந்து எட்ஜ் ஆகினால் பவுண்டரிகளும் அதிக அளவில் செல்லும் என்று தினேஷ் கார்த்திக் முகமது ஷமி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement