IND vs AUS : அடுத்தது என்ன டூப்ளிகேட் ஜடேஜாவா? 2வது போட்டிக்கு முன் ஆஸ்திரேலியாவை கலாய்த்த முகமது கைப் – காரணம் இதோ

Mohammed Kaif Australia
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பு உறுதியாகி விட்ட காரணத்தால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா வந்துள்ளது.

ஆனால் அதற்காக நாக்பூர் பிட்ச் பற்றி ஆரம்பத்திலேயே விமர்சித்த ஆஸ்திரேலியா வாயில் பேசியதை செயலில் காட்டாமல் சுமாராக செயல்பட்டு படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக அதே மைதானத்தில் 400 ரன்கள் குவித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது. முன்னதாக பிட்ச் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னராக கருதப்படும் ரவிச்சந்திரன் அஸ்வினை சிறப்பாக எதிர்கொள்வதற்கு தேவையான திட்டங்களை பிக்பேஷ் தொடரின் போதே வகுத்துவிட்டதாக தெரிவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து வெறித்தனமாக பயிற்சி எடுத்தது உலக அளவில் வைரலானது.

- Advertisement -

அடுத்தது டூப்ளிகேட் ஜடேஜாவா:
ஆனால் தமக்கு ஸ்கெட்ச் போட்ட ஆஸ்திரேலியாவுக்கு கடைசியில் தனது அற்புதமான திட்டங்களால் மொத்தமாக 8 விக்கெட்களை சாய்த்த அஷ்வின் 3வது நாளில் வெறும் 2 மணி நேரத்தில் 91 ரன்களுக்கு சுருட்ட முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் முதல் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திய ஜடேஜாவுக்கு டூப்பை தேடி ஆஸ்திரேலியா நகர்ந்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியில் ஜடேஜா போன்ற இடதுகை ஸ்பின்னரை தேர்வு செய்யாதது ஆஸ்திரேலியாலின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் இடது கை ஸ்பின்னரான மைக்கேல் ஸ்வெப்சன் தனது முதல் குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பியுள்ளார்.

இருப்பினும் ஏற்கனவே அணியில் இருக்கும் அனுபவமிக்க இடது கை ஸ்பின்னரான ஆஸ்டன் அகர் 2வது போட்டியில் விளையாடுவார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கி 7 விக்கெட்டுகளை சாய்த்து சவாலை கொடுத்த டோட் முர்பி போல 2வது போட்டியில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத மாட் குனேமானை அறிமுகமாக களமிறக்கி இந்தியாவை சாய்க்கும் திட்டத்தை ஆஸ்திரேலியா கையிலெடுக்க உள்ளது.

- Advertisement -

அதாவது அஸ்டன் அகர் அனுபவம் மிக்கவர் என்றாலும் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதால் அவருடைய நுணுக்கங்களையும் திறமையும் இந்தியா நன்கு தெரிந்து வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத மாட் குனேமான் பவுலிங் நுணுக்கங்களை இந்தியா தெரிந்திருக்காது என்பதால் அவரை 2வது போட்டியில் களமிறக்குவதற்கு பரிசளித்து வருவதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் முதல் போட்டியின் முடிவில் மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் 2வது போட்டியில் ஜடேஜாவின் டூப் போன்ற இடது கை ஸ்பின்னரான மாட் குனேமானை ஆஸ்திரேலியா பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் போட்டியில் அஷ்வின் விஷயத்திலேயே பல்ப் வாங்கிய ஆஸ்திரேலியா அஷ்வினை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தி ஆட்டநாயகன் விருது வென்ற ஜடேஜாவின் டூப்பை அடுத்த போட்டியில் தேடாது என்று நம்புவதாக முன்னாள் முகமது கைப் ட்விட்டரில் கலாய்த்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க:முதல் கப்’பே எங்களுக்கு தான், மந்தனா போன்ற தரமான வீராங்கனைகளை வாங்கி – மாஸ் காட்டும் ஆர்சிபி ரசிகர்கள்

“டூப்ளிகேட் அஸ்வினை எதிர்கொள்வதற்கும் உண்மையான அஸ்வினை எதிர்கொள்வதற்கும் இடையேயான வித்தியாசத்தை ஆஸ்திரேலியா இப்போது தெரிந்திருப்பார்கள். ஒரு மகத்தான ஆல் டைம் கிரேட் வீரரை சிறப்பாக எதிர்கொள்ள உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடும் ஒரு இளம் வீரரை எதிர்கொண்டு உங்களால் தயாராக முடியாது. அடுத்ததாக டெல்லியில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா ஜடேஜாவின் டூப்பை தேட மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement