டி20 உ.கோ வெற்றிக்கான ஆசிர்வாதம் கிடைச்சுருக்கு.. இனிமேல் இந்தியா சாக்கை சொல்ல முடியாது.. வாசிம் அக்ரம் 

Wasim Akram India
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோலாகலமாக மகிழ்வித்து நிறைவு பெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து அனைத்து வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக தயாராகத் துவங்கியுள்ளனர்.

சொல்லப்போனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாகவே உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினர். அதே போல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினரும் ஃபைனல் நடப்பதற்கு முன்பாகவே அமெரிக்காவுக்கு சென்றனர். ஏனெனில் ஃபைனலில் விளையாடிய கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணியில் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் தேர்வான 15 பேரில் யாருமே இடம் பெறவில்லை.

- Advertisement -

வெற்றிக்கான ஆசிர்வாதம்:
அதனால் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட ஒரு சிலரை தவிர்த்து எஞ்சிய இந்திய வீரர்கள் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு பயிற்சியில் ஈடுபட உள்ள இந்திய அணியினர் ஜூன் இரண்டாம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற உள்ள அதிகாரப்பூர்வ பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில் ஃபைனலில் இந்திய வீரர்கள் விளையாடாததால் வெற்றிக்கான ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

எனவே இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடிய சோர்வால் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்ற காரணத்தை இந்திய வீரர்கள் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நல்லது, தற்போது இந்திய வீரர்களில் யாரும் சோர்வாக இருக்கிறோம் என்று சொல்ல முடியாது”

- Advertisement -

“அதன் காரணமாக ஃபைனல் வந்து என்ன பிரயோஜனம். இந்தியா தான் முக்கியம். நாட்டுக்காக விளையாடுவோம் என்று அவர்கள் முன்னோக்கி யோசித்திருப்பார்கள். அந்த வகையில் இது இந்தியாவிற்கு மாறுவேடத்தில் கிடைத்த ஆசீர்வாதமாக இருக்கலாம். இதற்கு முந்தைய விவாதத்தில் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரால் சோர்வடைய வாய்ப்புள்ளதாக நான் தெரிவித்திருந்தேன். தற்போதும் அமெரிக்காவில் உள்ள சாலைகள் அவர்களுக்கானதாக இருக்காது”

இதையும் படிங்க: என்னையா டீம்ல எடுக்கல.. பி.சி.சி.ஐ-க்கு தரமான பதிலடி கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

“பாகிஸ்தான் அணியும் டாலாஸ் நகரில் முதல் போட்டியில் விளையாடுகிறது என்று நினைக்கிறேன். தற்போது அவர்கள் அங்கே சென்று ஓரிரு பயிற்சி போட்டிகளில் விளையாடி தயாராவார்கள். டி20 கிரிக்கெட்டில் இப்போதுள்ள வீரர்கள் நல்ல ஃபிட்னஸ் காரணமாக விரைவாக புத்துணர்ச்சியை பெற்று விடுவார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூன் 6ஆம் தேதி அயர்லாந்தை தங்களுடைய முதல் போட்டியில் எதிர்கொள்ளும் இந்தியா 9ஆம் தேதி நியூயார்க் நகரில் பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement