என்னையா டீம்ல எடுக்கல.. பி.சி.சி.ஐ-க்கு தரமான பதிலடி கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

Shreyas
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 500 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தார். அதோடு நல்ல பார்மிலும் இருந்த வேளையில் முதுகு வலி காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து விலக நேர்ந்தது.

அந்த நேரத்தில் அவர் வேண்டுமென்றே இந்திய அணியில் இருந்து வெளியேறியதாக கருதிய பிசிசிஐ அவரை ரஞ்சிக்கோப்பையில் விளையாடும் படி கேட்டுக்கொண்டது. ஆனால் தொடர்ச்சியான முதுகு வலி காரணமாக அவரால் உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரில் விளையாட முடியாமல் போனது.

- Advertisement -

எனவே அவரை நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் மத்திய ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியது. அதோடு எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் அவருக்கு இடம் கொடுக்காமல் கைவிட்டது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் இந்த செயல்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனது.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லி அணியை வழிநடத்திய அவர் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பிளேஆப் சுற்றுக்கு அழைத்துச்சென்றார். அதோடு 2020-ஆம் ஆண்டு டெல்லி அணியை முதல் முறையாக இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார். இப்படி கேப்டன்ஷிப்பில் தனது திறமையை அவர் வெளிப்படுத்தவே கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமித்தது.

இதையும் படிங்க : டி20 உ.கோ 2024 : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக காயத்திலிருந்து மீண்ட அவர் இந்த தொடரில் மிக சிறப்பான கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஆகியவற்றை வெளிப்படுத்தி அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்ததோடு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் தனது கம்பேக்கை வலுவாக முன்னெடுத்து வைத்துள்ளார்.

Advertisement