டி20 உ.கோ 2024 : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்

IND vs AUS
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. பொதுவாக இந்தியா ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமெனில் முதலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்று கௌதம் கம்பீர் சொல்வார். அவர் சொன்னது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் தோல்விகளில் எதிரொலித்தது.

அந்தளவுக்கு தரமான ஆஸ்திரேலியா இம்முறையும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இம்முறை மிட்சேல் மார்ஷ் தலைமையில் களமிறங்கும் அந்த அணியில் ட்ராவிஸ் ஹெட் பிளே ஆஃப் தவிர்த்து ஐபிஎல் 2024 சரவெடியாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவருடன் ஜோடியாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் டேவிட் வார்னர் தரத்தை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா:
அதை விட கேப்டன் மிட்சேல் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட் ஆகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆல் ரவுண்டர்கள் என்பது அந்த அணியின் மிகப்பெரிய பாலமாகும். இதில் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் ஆஸ்திரேலியாவுக்காக மிரட்டக்கூடியவர். அதே போல 2021 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்திய மேத்தியூ வேட் தரமான விக்கெட் கீப்பர் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், நாதன் எலிஸ் ஆகியோர் தரமான வேகப்பந்து வீச்சாளர்களாக வலு சேர்கின்றனர். மேலும் ஆடம் ஜாம்பா, அஷ்டன் அகர் ஆகிய ஸ்பின்னர்கள் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறடிக்க கூடியவர்களாக உள்ளனர். மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் ஜெய்ஸ்வால் திறமையான துவக்க வீரராக உள்ளார். அதே போல 3வது இடத்தில் நம்பிக்கை நாயகன் விராட் கோலி, 4வது இடத்தில் 360 டிகிரி உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் இருப்பது இந்தியாவுக்கு பலமாகும்.

- Advertisement -

இருப்பினும் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தரமான விக்கெட் கீப்பர்கள் பேட்ஸ்மேன்கள் என்றாலும் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தியதில்லை என்பது பின்னடைவாகும். மேலும் சிவம் துபே பந்து வீசுவாரா என்பது சந்தேகமாக இருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா சுமாரான ஃபார்மில் இருப்பது மற்றொரு பின்னடைவாகும். அந்த வகையில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரருக்கு பஞ்சமான இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பவுலிங் செய்ய மாட்டார்கள் என்பது மெகா பின்னடைவாகும்.

அக்சர் பட்டேல், ஜடேஜா பேட்டிங்கில் எப்போதாவது மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கிறார்கள். குல்தீப் யாதவ் அற்புதமான ஃபார்மில் இருக்கும் நிலையில் சஹால் ரன்களை வாரி வழங்குவது கவலைக்குரிய அம்சமாகும். அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் பும்ராவுக்கு நிகராக சிராஜ், அரஷ்தீப் இல்லை என்பது நிதர்சனம்.

இதையும் படிங்க: டி20 உ.கோ ரீவைண்ட்.. தோனியின் சாதூரியம்.. பாகிஸ்தானை பவுல் அவுட்டில் தெறிக்க விட்ட வரலாற்று சம்பவம்

அதனால் இம்முறையும் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியா கடுமையாக போராட வேண்டியிருக்கும். வரலாற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 31 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 19 போட்டிகளில் வென்று முன்னிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 11 போட்டியில் வென்றுள்ளது. 1 போட்டியில் மழையால் கைவிடப்பட்டது.

Advertisement