நாக் – அவுட் என்றாலே அலர்ஜி. இவரு இப்படி ஆடுனா கப் எப்டி ஜெயிக்க முடியும்? – மோசமான புள்ளிவிவரம் இதோ

VIrat Kohli Knock Out
- Advertisement -

ஒருசில உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் அசத்தினாலும் முக்கியமான நாக்-அவுட் போட்டிகளில் தடுமாறுவதை வரலாற்றில் பார்த்துள்ளோம். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இருப்பது ரசிகர்களுக்கு வேதனையான ஒன்றாகும். ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று முடிந்து நாக்-அவுட் சுற்று போட்டிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 27-ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Rajat Patidar 58

- Advertisement -

அந்த அணிக்கு ஏற்கனவே பார்மின்றி தவிக்கும் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் விராட் கோலி 7 (8) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே கைவிட்டார். இருப்பினும் எலிமினேட்டர் போட்டியில் அட்டகாசமான சதமடித்து காப்பாற்றிய இளம் வீரர் ரஜத் படிதார் அடுத்ததாக களமிறங்கி டுப்லஸ்ஸிஸ் உடன் இணைந்து அதிரடியாக 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுக்க போராடினார். ஆனால் அவருக்கு கை கொடுக்க வேண்டிய டுப்லஸ்ஸிஸ் 25 (27) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 24 (13) ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.

பெங்களூரு தோல்வி:
இருப்பினும் அதிரடியை கைவிட்டால் தோல்வியடைந்து விடுவோம் என்ற எண்ணத்தில் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய ரஜத் படிதார் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் கடந்து 58 (42) ரன்களில் போராடி ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் காப்பாற்ற வேண்டிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் 6 (7) ரன்களில் அவுட்டாகி கைகொடுக்க தவறினார். அந்த அளவுக்கு ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்ட பிரஸித் கிருஷ்ணா மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் – பட்லர் ஓபனிங் ஜோடி 61 ரன்கள் மிரட்டல் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தது.

Jos Buttler vs RCB

இதில் ஜெய்ஸ்வால் 21 (13) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) தேவ்டுத் படிக்கள் 9 (12) என சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று கடைசிவரை சொல்லி அடித்த ஜோஸ் பட்லர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் இந்த வருடத்தின் 4வது சதமடித்து 106* (60) ரன்கள் விளாசி அதிரடி பினிஷிங் கொடுத்தார். அதனால் 18.1 ஓவரிலேயே 161/3  ரன்கள் எடுத்த ராஜஸ்தான் மே 29இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியை பரிசளித்த குஜராத்தை மீண்டும் எதிர்கொண்டு கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த தகுதி பெற்றது.

- Advertisement -

நாக் – அவுட் அலர்ஜி:
இது போன்ற நாக்-அவுட் போட்டிகளில் விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர் முன் வந்து அதிரடியாக சிறப்பாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்தால் மட்டுமே பெங்களூரு போன்ற கோப்பையை தொட முடியாத அணியால் வெற்றிபெற முடியும். ஆனால் லீக் போட்டிகளில் எதிரணிகளை பந்தாடும் அவர் நாக்-அவுட் என்றாலே கைகால் நடுங்குவதை போல் செயல்படுகிறார்.

Virat Kohli

1. ஆம் நேற்றைய போட்டி உட்பட வரலாற்றில் பெங்களூரு இதுவரை 3 முறை குவாலிபயர் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 3 போட்டிகளில் அவரின் ஸ்கோர் இதோ:
1. 8 (12), மும்பைக்கு எதிராக, 2011.
2. 12 (9), சென்னைக்கு எதிராக, 2015
3. 7 (8), ராஜஸ்தானுக்கு எதிராக, நேற்று, 2022*

- Advertisement -

2. மேற்குறிப்பிட்ட இந்த 3 போட்டிகளில் 2011இல் மும்பைக்கு எதிரான போட்டியில் மட்டும் கிறிஸ் கெயில் 89 ரன்கள் அடித்தால் பெங்களூரு வென்றது. எஞ்சிய 2 போட்டிகளில் தோற்றது.

Virat Kohli Bowled

3. சரி அதுதான் அப்படி என்றால் வாழ்வா – சாவா என்ற ஐபிஎல் எலிமினேட்டர் நாக் – அவுட் போட்டிகளில் அவரின் ஸ்கோர்கள் இதோ:
1. 12 (18) ராஜஸ்தானுக்கு எதிராக, 2015
2. 6 (7), ஹைதராபாத்துக்கு எதிராக, 2020
3. 39 (33), கொல்கத்தாவுக்கு எதிராக, 2021
4. 25 (24), லக்னோவுக்கு எதிராக, 2022*

- Advertisement -

4. மேற்குறிப்பிட்ட 4 போட்டிகளில் 2015இல் ராஜஸ்தானுக்கு எதிராக ஏபி டிவில்லியர்ஸ் 66 (38) ரன்கள் அதிரடியில் மட்டும் பெங்களூரு வென்றது. எஞ்சிய 3 போட்டிகளில் தோற்றது.

இதையும் படிங்க : நாக் – அவுட்டில் பெங்களூருவின் வெற்றிக்காக போராடிய ரஜத் படிதார் ! ரெய்னாவையும் மிஞ்சிய சூப்பர் சாதனை

5. இது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக பைனல் உட்பட அவர் பங்கேற்ற அனைத்து நாக் அவுட் போட்டிகளையும் சேர்த்தால் 13 போட்டிகளில் வெறும் 308 ரன்களை 125 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார். விதிவிலக்காக கடந்த 2016 ஐபிஎல் பைனலில் மட்டும் 54 ரன்கள் எடுத்து போராடினார்.

இதிலிருந்தே 90% நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி அழுத்தத்தை தாங்கி தைரியமாக பேட்டிங் செய்ய முடியாமல் சொதப்பியுள்ளார் என்பதும் அதுவே பெங்களூரு காலம் காலமாக கோப்பையை வெல்ல முடியாமல் தவிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது.

Advertisement