அன்றும் இன்றும் ராசி அப்படி ! கோச்ச மாத்துங்க – பஞ்சாப் தோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி

pbks
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 11-ஆம் தேதி நடைபெற்ற 64-வது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புள்ளிப் பட்டியலில் தலா 12 புள்ளிகளைப் பெற்றிருந்த இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு வெற்றி நிச்சயமாக தேவைப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. நவிமும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி பஞ்சாப் பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 20 ஓவர்களில் 159/7 ரன்கள் மட்டுமே போராடி எடுத்தது.

Mitchell Marsh 63

- Advertisement -

அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் மற்றொரு தொடக்க தொடக்க வீரர் சர்பராஸ் கான் 32 (16) ரன்களும் லலித் யாதவ் 24 (21) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது மிடில் ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டிய ரிஷப் பண்ட் 7 (3) ரோமன் போவல் 2 (6) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

பஞ்சாப் தோல்வி:
இருப்பினும் 3-வது இடத்தில் களமிறங்கி நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 63 (48) ரன்கள் எடுத்து காப்பாற்றினார். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 160 என்ற இலக்கை அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட பஞ்சாப் எளிதாக சேசிங் செய்துவிடும் என்று அனைவரும் நினைத்தனர்.

Kuldeep Yadav

இருப்பினும் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ 28 (15) ஷிகர் தவான் 19 (16) ஆகியோர் அதிரடியாக ரன்களை ரன்களை எடுத்து திடீரென ஆட்டமிழந்தனர். ஆனால் நடுவரிசையில் கைகொடுக்க வேண்டிய ராஜபக்சா 4 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற கேப்டன் மயங்க் அகர்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதைவிட அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அதிரடி வீரர் லியம் லிவிங்ஸ்டனும் 3 (5) ரன்களில் அவுட்டானதால் 61/5 என ஆரம்பத்திலேயே சுருண்ட அந்த அணியின் தோல்வி உறுதியானது.

- Advertisement -

அன்றும் இன்றும் பஞ்சாப்:
இறுதியில் ஜிதேஷ் சர்மா 44 (34) ராகுல் சஹர் 25* (24) ரன்களை எடுத்தாலும் 20 ஓவர்களில் 142/9 ரன்களை மட்டுமே எடுத்து பஞ்சாப் 17 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. டெல்லி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்த ஷார்துல் தாக்கூர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி புள்ளி பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியதுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் உறுதியாக தக்க வைத்துக் கொண்டது.

pbks 1

மறுபுறம் டாஸ் வென்று சிறப்பாக பந்துவீசி டெல்லியை 159 ரன்களுக்கு மடக்கிப் பிடித்த பஞ்சாப் வாழ்வா – சாவா என்ற இந்த முக்கிய போட்டியில் 160 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது. அந்த அணியின் ராஜபக்சா, லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால் ஆகியோர் குறைந்தது 10 ரன்கள் எடுத்திருந்தால் கூட பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும். இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு 99% பறிபோனதுடன் மும்பை, சென்னையை தொடர்ந்து 3-வது அணியாக வெளியேற தயாராகியுள்ளது.

- Advertisement -

1. அதந் காரணமாக முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று அந்த அணியின் கனவு மீண்டும் சுக்குநூறாக உடைந்துள்ளது. கடந்த 2008 முதல் ஒவ்வொரு முறையும் இதேபோல சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும் அந்த அணி அதற்கேற்றார்போல் விளையாடாமல் வெறும் கையுடன் திரும்புவது வழக்கமாகி வருகிறது.

2. அதிலும் பெரும்பாலான வருடங்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதே அந்த அணியின் மிகப்பெரிய சாத்னையாக பார்க்கப்படும் அளவுக்கு சுமாரான அணியாகவே பஞ்சாப் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு லீக் சுற்றிலேயே சொதப்பும் அந்த அணியின் தோல்விக்கு ஒவ்வொரு வருடமும் அந்த அணி நிர்வாகம் செய்யும் அதிரடி மாற்றங்களும் காரணமாகிறது.

- Advertisement -

3. ஏனெனில் தோல்வி அடைந்தால் உடனே பதற்றமடையும் அந்த அணி நிர்வாகம் வரலாற்றிலேயே இதுவரை அதிக கேப்டன்களை நியமித்த அணியாக இருந்து வருகிறது. 2020, 2021இல் கேஎல் ராகுல் கேப்டனாக இருந்த போதிலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்தது.

4. இருப்பினும் இம்முறை மயங்க் அகர்வால் தலைமையில் லிவிங்ஸ்டன், ரபாடா, பேர்ஸ்டோ, தவான், அர்ஷிதீப் சிங், சஹர் போன்ற தரமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை கொண்ட அணியாக காட்சியளித்த பஞ்சாப் 200 ரன்களைக் கூட அசால்டாக சேஸிங் செய்து கோப்பையை வெல்லக்கூடிய அணியாக ஆரம்பத்தில் தன்னை நிரூபித்தது.

5. ஆனால் முக்கிய போட்டியில் வழக்கம் போல அந்த அணி சொதப்பியதால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் இனி கேப்டனை மாற்றாமல் அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை தான் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

6. ஏனெனில் இம்முறை மட்டுமல்ல கடந்த 2019 முதல் தரமான வீரர்கள் இருந்த போதிலும் அவர்களின் சிறந்த திறமையை சரியான தருணத்தில் வெளிக்கொணரும் பயிற்சியாளர் வேலையில் அவர் தோல்வியடைந்து விட்டதாக பல ரசிகர்கள் கூறுகின்றனர்.

7. ஆனால் பயிற்சியாளர் பயிற்சி தான் கொடுக்க முடியும் களமிறங்கி விளையாட முடியாது என்று கூறும் சில ரசிகர்கள் அன்றும் இன்றும் என்றும் இது பஞ்சாப் அணியின் ராசி என்பதால் கும்ப்ளேவை குறை கூறுவதிலும் அர்த்தமில்லை என்றும் பேசுகின்றனர்.

Advertisement