அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலககோப்பைக்கு தேர்வான 2 கத்துக்குட்டி அணிகள் – மொத்தம் எத்தனை டீம் தெரியுமா?

Cup
- Advertisement -

கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இதுவரை 8 முறை நடைபெற்று முடிந்துள்ளன. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அடுத்து மூன்றாவது வடிவமாக இடம் பிடித்த இந்த டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது டி20 போட்டிகள் நிறைவே நடைபெற்று வருகின்றன. அது தவிர்த்து உலகெங்கிலும் டி20 லீக் தொடர்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச அணிகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மோதும் வகையில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்த 8 டி20 உலககோப்பை தொடர்களில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.

- Advertisement -

அதை தவிர்த்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒன்பதாவது டி20 உலக கோப்பையை தொடரானது நடைபெற உள்ளது.

இந்நிலையில் அந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன என்ற தகவல் வெளியாக்கியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக அந்த தொடருக்கு தகுதி ஆகியுள்ளது.

- Advertisement -

அதேபோன்று கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தரவரிசை அடிப்படையில் தகுதி பெற்றன. இந்நிலையில் மீதமுள்ள 8 இடங்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : சச்சின் மாதிரியே டார்ச்சர் பண்ணா உ.கோ கிடைக்காது பரவால்லயா.. இந்திய ரசிகர்களை எச்சரித்த நாசர் ஹுசைன்

அந்த வகையில் ஆசிய அணிகளுக்கு இடையேயான தகுதி சுற்று போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய ஓமன் மற்றும் நேபாள் ஆகிய இரண்டு அணிகளும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement