100% பெஸ்ட்.. சின்ன மாற்றம் தான் செஞ்சேன்.. இந்தியா அதிர்ஷ்டத்தை கொடுத்துருச்சு.. போப் பேட்டி

Ollie Pope 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் நகரில் ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, 87 ராகுல் 86, ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதிர்ஷ்டமான இன்னிங்ஸ்:
அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்துக்கு நெருக்கடியான நேரத்தில் ஓலி போப் அபாரமான சதமடித்து 190 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 231 ரன்களை துரத்திய இந்தியா சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் சுமாராக விளையாடி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக பரத் மற்றும் அஸ்வின் தலா 28 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இங்கிலாந்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் சவாலான இந்தியாவில் அடித்த 196 ரன்கள் தான் தன்னுடைய சிறந்த சதம் என்று ஆட்டநாயகன் ஓலி போப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்திய வீரர்கள் சில கேட்ச்களை கோட்டை விட்டது தமக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னுடைய 100% சிறந்த இன்னிங்ஸ். இந்தியா போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நாட்டில் இது போன்ற தொடரை வெற்றியுடன் துவக்குவதற்கு உதவிய இந்த சதத்தால் என்னுடைய மற்ற 4 சதங்களை விட தலைநிமிர்கிறேன்”

இதையும் படிங்க: எந்த இடம்னு பாயிண்ட் பண்ணி சொல்ல முடியல.. ஆனா இப்படி தோத்தது ரொம்ப கஷ்டமா இருக்கு – ரோஹித் சர்மா வருத்தம்

“2வது இன்னிங்ஸில் எனக்கு சில அதிர்ஷ்டம் (கேட்ச்) கிடைத்தது. நான் இன்சைட் எட்ஜ்ஜை கவர் செய்வதில் கவனம் செலுத்தினேன். மேலும் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்பில் நேர்மறையான மனநிலையுடன் செயல்பட்டேன். இந்த தொடருக்கு நான் நீண்ட காலமாக தயாரானேன். இந்த தொடருக்காக என்னுடைய ஆட்டத்தில் சிறிய மாற்றத்தை மட்டும் செய்தேன்” என்று கூறினார். அந்த வகையில் இப்போட்டியில் ஆரம்பத்தில் முன்னிலை பெற்ற இந்தியா கடைசியில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Advertisement