
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. இதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் இங்கிலாந்து விளையாட உள்ளது. அந்தத் தொடரிலும் வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இங்கிலாந்து போராட உள்ளது.
ஏனெனில் ஏற்கனவே தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 2021, 2023 ஃபைனல்களுக்கு இங்கிலாந்து தகுதி பெறவில்லை. அந்த சூழ்நிலையில் இம்முறையும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்தது. அத்தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆரம்பத்திலேயே இங்கிலாந்து எச்சரித்தது.
ஜெய்ஸ்வால் போல:
அதற்கேற்றார் போல் முதல் போட்டியிலேயே ஓலி போப் 196 ரன்கள் விளாசிய உதவியுடன் இங்கிலாந்து அற்புதமான வெற்றி பெற்றது. ஆனால் அங்கிருந்து சுதாரித்து விளையாடிய இந்தியா அதற்கடுத்த 4 போட்டிகளிலும் வென்று இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் அத்தொடரில் முதல் போட்டியிலேயே சதமடித்த தாம் மேற்கொண்டு 712 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால் போல விளையாடி இந்தியாவை தோற்கடிக்க விரும்பியதாக ஓலி போப் விரும்பியுள்ளார்.
ஆனால் 2வது போட்டியிலிருந்து தாம் நன்றாக விளையாடவில்லை என்று வருத்தத்தை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் நாங்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகளுக்கு பின் எங்களை சுற்றி எதிர்மறையான விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் வெல்வது மிகப்பெரிய சவால் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்”
“196 ரன்களை நான் அடித்த போது அதே வேகத்தை யசஸ்வி ஜெய்ஸ்வால் போல தொடர் முழுவதும் எடுத்துச் சென்று முடிந்தளவுக்கு பெரிய ரன்கள் குவிக்க விரும்பினேன். இருப்பினும் முதல் போட்டியில் அதிகமான கவனம் செலுத்திய நான் தற்போதைய சூழ்நிலைகளுக்கு என்னை விரைவாக உட்படுத்திக் கொள்வதில் தவறினேன். இந்தியாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் விரக்தியை ஏற்படுத்தியது”
இதையும் படிங்க: சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை வீரர்.. 14 நாட்கள் கெடு விதித்த ஐசிசி.. 3 விதிமுறையை மீறியதால் அதிரடி
“ஏனெனில் அது ஃபார்மை கண்டறிய நல்ல வாய்ப்பை கொடுத்தது. அதே சமயம் தோல்விக்கான ரிஸ்க் இருந்தது. அந்தத் தொடரின் 10 இன்னிங்ஸ்களிலும் அது தான் எனக்கு நடந்தது. அத்தொடரில் சில நேரங்களில் நான் நன்றாக செட்டிலாகி 50, 80 ரன்களை அடித்தேன். ஆனால் அதை முழுமையாக பயன்படுத்தியிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். கடினமாக உழைத்து பெற்ற நல்ல வாய்ப்பை நான் பயன்படுத்தாதது கடுப்பாக்கியது” என்று கூறினார்.