சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை வீரர்.. 14 நாட்கள் கெடு விதித்த ஐசிசி.. 3 விதிமுறையை மீறியதால் அதிரடி

Praveen Jayawickrama
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி உலகம் முழுவதிலும் நடைபெறும் அனைத்து கிரிக்கெட்டையும் கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறது. அதில் விளையாடும் வீரர்களையும் அவர்களுக்கு தெரியாமல் ஐசிசி கண்காணித்து வருவது வாடிக்கையாக்கும். அதனால் பல வீரர்கள் பல வருடங்களுக்கு முன்பாக செய்த சூதாட்டமும் தவறும் பின்னாலில் வெளிவருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில் தற்போது இலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரமா சூதாட்ட புகாரில் ஆதாரத்துடன் சிக்கியதாக ஐசிசி அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளரான அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஒருநாள், 5 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த போட்டிகளில் மொத்தம் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் விளையாடினார்.

- Advertisement -

ஐசிசி விதித்த கெடு:
இந்த சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு தரகர்களால் ஜெயவிக்ரமா அணுகப்பட்டதை ஐசிசி கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக அந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை பிரிமியர் லீக் மற்றும் தாம் விளையாடிய சர்வதேசப் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு அவரை தரகர்கள் அணுகியுள்ளனர். ஆனால் அதை உடனடியாக இலங்கை வாரியம் அல்லது ஐசிசியிடம் ஜெயவிக்கிரமா சொல்லவில்லை.

அத்துடன் தனது தவறை மறைப்பதற்காக சூதாட்ட தரகர்களுடன் மேற்கொண்ட உரையாடல் ஆதாரங்களை அவர் அழித்துள்ளார். அதை தற்போது ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ள ஐசிசி இது பற்றி ஆகஸ்ட் 6ஆம் தேதியிலிருந்து அடுத்த 14 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு ஜெயவிக்கிரமாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அவரது கருத்தை கேட்ட பின் இதற்கான தண்டனைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயவிக்கிரமா செய்த 3 தவறுகள் மற்றும் மீறிய விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விவரம் பின்வருமாறு.
பிரிவு 2.4.4 – தேவையற்ற தாமதமின்றி எதிர்கால சர்வதேச போட்டிகளில் சூதாட்டத்தை மேற்கொள்ள அவர் பெற்ற அணுகுமுறையின் விவரங்களை ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்க தவறியது.
பிரிவு 2.4.4 – தேவையற்ற தாமதமின்றி ஊழல் தடுத்து பிரிவில் புகார் செய்யத் தவறியமை. 2021 லங்கா பிரீமியர் லீக்கில் சூதாட்டம் செய்வதற்கு ஊழல் செய்பவர் சார்பாக மற்றொரு வீரரை அணுகுமாறு கேட்கப்பட்ட அணுகுமுறையின் விவரங்கள்.

இதையும் படிங்க: கம்பீரின் பிடிவாதத்தால் பயனற்று போச்சு.. விராட் கோலி, ரோஹித்துக்கு அவங்க செஞ்சது தான் கரெக்ட்.. ஆகாஷ் சோப்ரா

பிரிவு 2.4.7 – ஊழல் நடத்தையில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் சலுகைகள் செய்யப்பட்ட செய்திகளை அழிப்பதன் வாயிலாக விசாரணையை தடுத்தது.
அத்துடன் பிரிவு 1.7.4.1 மற்றும் 1.8.1 – சர்வதேச போட்டி கட்டணங்களுடன் இலங்கை பிரிமியர் லீக் கட்டணம் தொடர்பாகவும் ஐசிசி நடவடிக்கை எடுக்க இலங்கை வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.

Advertisement