கம்பீரின் பிடிவாதத்தால் பயனற்று போச்சு.. விராட் கோலி, ரோஹித்துக்கு அவங்க செஞ்சது தான் கரெக்ட்.. ஆகாஷ் சோப்ரா

- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கையின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது இந்த வரலாற்றுத் தோல்விக்கு முக்கிய காரணமானது. அது போக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் இந்திய பேட்டிங் வரிசையில் செய்த தேவையற்ற மாற்றங்கள் தோல்விக்கு காரணமானது.

அதனால் வலுவான உலகின் நம்பர் ஒன் இந்திய அணியை அசால்டாக இலங்கை தோற்கடித்தது. முன்னதாக இலங்கை சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வருவதால் இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க முடிவெடுத்தது. ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவர்களை வலுக்கட்டாயமாக வர வைத்து இத்தொடரில் விளையாட வைத்தார்.

- Advertisement -

கம்பீரின் கட்டாயம்:
இந்நிலையில் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்ற முன்னாள் பயிற்சியாளர்கள் இது போன்ற முக்கியமற்ற தொடரில் சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்து வருங்காலத்துக்கு தேவையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் கௌதம் கம்பீர் யாராக இருந்தாலும் விளையாடியாக வேண்டும் என்ற வலுக்கட்டாயத்தை ரோஹித், விராட் கோலி போன்ற சீனியர்கள் மீது திணித்துள்ளதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனால் இத்தொடர் இந்தியாவுக்கு கற்றுக் கொள்வதற்கு எதுவுமின்றி பயனற்ற தொடராக அமைந்ததாக கூறும் அவர் இது பற்றி பேசியதற்கு பின்வருமாறு. “வருங்காலத்தை நோக்கிய திட்டமும் பாதையும் என்ன? ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி இருந்த போது அது நன்றாக தெரிந்தது. குறிப்பாக விரைவில் உலகக் கோப்பை இல்லாத சூழ்நிலைகளில் ஜிம்பாப்வே, இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக நடைபெற்ற முக்கியமற்ற தொடர்களை அவர்கள் ஸ்பெஷலாக பார்க்கவில்லை. அதனாலேயே அத்தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது”

- Advertisement -

“2 ஐசிசி தொடர்களுக்கு மத்தியில் முக்கியமான தொடர் நடைபெறவில்லையெனில் அவர்கள் சீனியர்கள் ஓய்வெடுக்கட்டும் குழந்தைகள் விளையாடட்டும் என்று சொன்னார்கள். அவர்கள் புதிய வீரர்களை முயற்சித்தனர். ஆனால் இங்கே அது நடக்கவில்லை. டி20 உலகக்கோப்பையில் விளையாடிய ரோஹித், விராட் சாம்பியன்ஸ் ட்ராபி வருவதால் நிச்சயம் விளையாடியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்”

இதையும் படிங்க: 27 வருட கௌரவத்தை முடிச்சுட்டீங்களே.. அவருக்குப் பின் சுந்தர் எவ்வளவோ பரவால்ல.. இந்திய அணியை விளாசிய ஷமி

“அடுத்ததாக இந்தியா 2025 பிப்ரவரி மாதத்தில் தான் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. எனவே 2024 இலங்கைத் தொடரில் நடந்த எதையுமே அணி நிர்வாகம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. இங்கே நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவும் போவதில்லை. எனவே இத்தொடரில் விராட், ரோஹித் விளையாடாமல் போயிருந்தாலும் அது சாம்பியன்ஸ் ட்ராபி தேர்வில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் கம்பீர் வந்ததும் நீங்கள் ஓய்வெடுக்க முடியாது ஃபிட்டாக இருந்தால் கண்டிப்பாக விளையாட வர வேண்டும் என்று அறிவித்துள்ளார்” எனக் கூறினார்.

Advertisement