ஜ்
இலங்கைக்கு எதிராக நிறைவு பெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா இழந்தது. அதனால் 27 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது.
குறிப்பாக 3 போட்டிகளிலுமே கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் விராட் கோலி உள்ளிட்ட மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதியே பெறாத இலங்கையிடம் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியா தோற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஷமி ஏமாற்றம்:
இந்நிலையில் 3வது போட்டியில் ரோஹித்துக்கு பின் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே கொஞ்சமும் போராடாமல் இந்தியாவை தோல்வியடைய வைத்ததாக முகமது ஷமி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்பின் வந்ததும் இந்திய பேட்ஸ்மேன்கள் நிறைய பிரச்சனையை சந்தித்தனர்”
“ரோஹித் சர்மாவுக்கு பின் பேட்டிங்கில் யாருமே நன்றாக செயல்படவில்லை. நம் பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். 16வது ஓவரின் முடிவிலேயே 100 ரன்கள் எடுத்த இந்தியா அதன் பின் 7 விக்கெட்டுகளை இழந்து தோற்றது. சுழலுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் உதவியின்றி திண்டாடினர். இந்திய பேட்ஸ்மேன்கள் கவலையுடன் தெரிந்தனர். இந்திய பேட்டிங்கில் 3, 4, 5, 6 ஆகிய இடங்களில் விளையாடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே நகரவில்லை”
“ஆனால் 9வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் போராடினார். இந்த தொடரால் 27 வருட சாதனையும் உடைக்கப்பட்டுள்ளது. 27 வருடத்திற்கு பின் இந்தியாவுக்கு எதிராக இலங்கை வென்றுள்ளது. அதற்காக வாழ்த்துக்கள். இந்திய அணியில் நிறைய கேள்விகள் காணப்படுகின்றன. இது போன்ற தொடர்கள் வெற்றி தோல்விகளை பொறுத்தது. எனவே நாம் நம்முடைய ஆட்டத்திலும் திறனிலும் கவனம் செலுத்த வேண்டும்”
இதையும் படிங்க: அவரு எதுக்கு இந்திய அணியில் இருக்காருன்னே தெரியல.. வேகப்பந்து வீச்சாளரை சாடிய – சீக்கா ஸ்ரீகாந்த்
“சிறிய அணிகளுக்கு எதிராக இப்படி தோற்கும் போது சர்ச்சைகள் எழுவது வழக்கம். இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய அணியை பொறுத்த வரை தங்களுடைய விளையாட்டிலும் திறனிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றே நான் சொல்வேன். வாழ்த்துக்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் ஷமி காயத்திலிருந்து இந்தியாவுக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



