அவரு எதுக்கு இந்திய அணியில் இருக்காருன்னே தெரியல.. வேகப்பந்து வீச்சாளரை சாடிய – சீக்கா ஸ்ரீகாந்த்

Srikkanth
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (0-2) என்ற கணக்கில் இழந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை பறிகொடுத்தது.

இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி என்ன காரணம் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது : இந்திய அணி இலங்கை அணியை பொட்டலம் கட்டிவிடும் என்று தான் நினைத்தேன். இலங்கை அணியை நான் பொட்டலம் அணி என்று தான் கூறிவந்தேன். ஆனால் இலங்கை அணி இந்திய அணியை பொட்டலம் கட்டிவிடும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஜடேஜா, பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் இல்லாததால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இலங்கை அணியிலும் தான் பதிரானா, மதுஷங்கா, ஹஸரங்கா போன்றோர் இடம்பெறவில்லை. ஆனாலும் அவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வில்லையா? இந்திய வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை.

- Advertisement -

அதேபோன்று இலங்கை அணியில் புதுப்புது வீரர்கள் எங்கிருந்தோ வந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இந்த தொடர் முழுவதுமே இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாட இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதும் சிரமப்பட்டனர். சிராஜ் எதற்காக இந்திய அணியில் இருக்கிறார்? என்று எனக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க : இப்போ தெரியுதா அவர் இல்லாம இந்திய அணி ஒண்ணுமே இல்ல.. இந்திய அணியை விமர்சித்த – முன்னாள் பாக் வீரர்

சிராஜ் பார்மில் இல்லாமல் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒருமுறை ஆசியக்கோப்பையில் 6 விக்கெட் வீழ்த்தி விட்டார். அதன்பிறகு பெரியதாக அவர் சிறப்பாக செயல்படவில்லை. அந்த ஒரு போட்டியை வைத்தே 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். மேலும் 4 வருடம் ஆடுவார் என சிராஜை கடுமையாக சாடியுள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

Advertisement