பேட்டிங்கில் அவரு.. பந்துவீச்சில் இவரு.. இரண்டே பேரால் தோல்வியை சந்தித்த இந்திய அணி – விவரம் இதோ

Pope-and-Hartley
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 436 ரன்களை குவித்தது.

பின்னர் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 163 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தருமாறினாலும் அந்த அணியின் நட்சத்திர வீரராக ஒல்லி போப் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 196 ரன்கள் குவித்தார். அவரது இந்த மிகச்சிறப்பான பேட்டிங் காரணமாக இங்கிலாந்து அணி 230 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது போட்டியை மிகச் சிறப்பாகவே துவங்கி இருந்தாலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான டாம் ஹார்ட்லியின் சுழலில் சிக்கிய இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இதன் காரணமாக 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இதையும் படிங்க : ரஞ்சி போட்டியில் 9 பவுண்டரி, 7 சிக்ஸர் வேறலெவலில் சம்பவம் செய்த ஷிவம் துபே – இறுதிநேரத்தில் அபாரம்

அழுத்தமான நேரத்தில் முக்கிய போட்டிகளில் கோட்டை விடும் இந்திய அணியானது இந்த போட்டியிலும் அழுத்தத்தை சந்தித்து தோல்வியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் ஒல்லி போப் 196 ரன்கள் அடித்ததும், டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை எடுத்ததும் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement