ஒருநாள் போட்டிகளை பார்த்து புளிச்சு போயிட்டோம் ! இனி முழுக்க டி20 மூடுக்கு மாறலாம் – முன்னாள் வீரர் கருத்து

World
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் டி20 தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை 65 நாட்களாக பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த பரபரப்பான போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ளது. இந்த வருடம் 10 அணிகள் விளையாடியதால் கோப்பையை வெல்வதற்கு முன்பை விட கடுமையான போட்டி நிலவியது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய ராஜஸ்தானை இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

மொத்தத்தில் கடந்த 2 மாதங்களாக தினந்தோறும் நகத்தைக் கடிக்கும் அளவுக்கு த்ரில்லான போட்டிகளை கண்டு வந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு தற்போது ஐபிஎல் முடிந்துள்ளதால் பொழுதுபோக்கின்றி காலத்தைத் தள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அடுத்ததாக வரும் 9-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தான் இந்தியா விளையாடுகிறது.

முழுக்க ஐபிஎல்:
முன்னதாக நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி நடைபெற்ற நிலையில் அதை சீர்படுத்தி 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக நிறைய வருடங்கள் விளையாடப்பட்டது. அதன்பின் 60 ஓவர் போட்டிகள் கொண்ட ஒருநாளில் முடிவைக் கொடுக்கும் ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதுவும் நாளடைவில் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் காரணமாக 5 நாட்கள் முடிவு கிடைக்காத டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாளில் முடிவைக் கொடுக்கும் ஒருநாள் போட்டிகள் 90களில் ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றன.

இருப்பினும் அதையும் உட்கார்ந்து பார்க்க முடியாமல் 2005 வாக்கில் 20 ஓவர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் அது 3 – 4 மணி நேரங்களில் முடிவைக் கொடுத்தன. அதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் டி20 போட்டிகளின் மீது ரசிகர்களின் மோகம் இருமடங்கு திரும்பியது. போதாகுறைக்கு ஐபிஎல் போல் ஒவ்வொரு நாட்டிலும் டி20 தொடர்கள் நடைபெறுவதால் இப்போதெல்லாம் ஏறக்குறைய 90 சதவீத ரசிகர்கள் அதைத்தான் விரும்புகின்றனர்.

- Advertisement -

புளித்துபோன ஒன்டே:
அதுவும் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட பெரும்பாலும் கடைசி ஓவர் வரை சென்று த்ரில் விருந்தை படைக்கும் தொடராக ஐபிஎல் உருவாகியுள்ளது. அதனால் பெரும்பாலும் ஒருதலைப்பட்சமாக தரமில்லாமல் நடைபெறும் சர்வதேச டி20 போட்டிகளை உலக கோப்பைக்களாக மட்டும் நடத்தி வருடத்திற்கு 2 ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்தனர்.

Chopra

அந்த நிலைமையில் சமீப காலங்களில் தரமில்லாமல் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிகள் பெரும்பாலும் ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு பரபரப்பாக நடைபெறாமல் சாதாரணமாக நடைபெறுவதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதனால் அதைப் பார்த்து பார்த்து புளித்து போன ரசிகர்கள் டி20 கிரிக்கெட் அதிகம் விரும்புவதாகவும் அதுதான் தரமாகவும் அதேசமயம் பணத்தை கொடுப்பதாக இருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

டி20 மூட்:
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆர்வத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அனைத்தையும் பணமாக பார்க்க கூடாது என்பதால் டெஸ்ட் போட்டியை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் மிகவும் அலுப்பு தட்டுவதாக மாறிவிட்டது. எந்த அர்த்தமும் இல்லாமல் நடைபெறும் அந்த போட்டிகளை யாரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஒருநாள் கிரிக்கெட் தடுமாறும் அளவுக்கு டி20 கிரிக்கெட் தடுமாறுவதில்லை என்று நினைக்கிறேன். எனவே சர்வதேச டி20 போட்டிகளை தொடர்ந்து நடத்தலாம். ஏனெனில் ஒளிபரப்பாளர்களுக்கு அது தேவைப்படுகிறது. இல்லையேல் கிரிக்கெட் வாரியங்களுக்கு அவர்கள் பணம் தர மாட்டார்கள்” என்று கூறினார்.

worldcup

அதாவது 2 ஐபிஎல் போன்ற அம்சங்களுக்கு பதில் சர்வதேச டி20 போட்டிகளை தொடர்ந்து நடத்தலாம் என தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா அர்த்தமில்லாமல் நடைபெறும் ஒருநாள் போட்டிகளை தவிர்க்கலாம் என்று யோசனை தெரிவிக்கிறார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் 2 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் அது உலக கோப்பையாக விளையாடினால் அதற்காக தயாராவதற்கு போதிய நேரம் கிடைக்காது” என்று கூறினார்.

இதையும் படிங்க : சச்சினின் ஆல் டைம் சாதனையை ரூட் உடைப்பார் – உறுதியாக கூறும் முன்னாள் ஆஸி கேப்டன்

இருப்பினும் 100% டி20 போட்டிகளை மட்டும் விரும்பும் ரசிகர்களைத் தவிர ஏனையவர்கள் இந்த கருத்தை விரும்ப மாட்டார்கள் என்றே கூறலாம். ஏனெனில் என்னதான் டி20 உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்தாலும் கூட ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை என்றால் அது ஒருநாள் போட்டிகளை மையமாக கொண்ட 50 ஓவர் உலகக் கோப்பை தான் ரசிகர்களிடையே பிரசித்தி பெற்றதாகும். அதைத்தான் ரசிகர்களும் பெரிய உலக கோப்பையாக விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் அதை 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்த அவ்வப்போது அனைத்து வருடங்களிலும் ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது இன்றியமையாததாகும்.

Advertisement