IND vs WI : இது எல்லாமே என் அம்மாவுக்காக தான். ஆட்டநாயகன் விருதை வென்ற – வெ.இ வீரர் நெகிழ்ச்சி

Obed McCoy
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் இரண்டாவது போட்டி நேற்று வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை தற்போது ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.

McCoy

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 138 ரன்களை மட்டுமே குவிக்க 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபெட் மெக்காய் திகழ்ந்தார். இந்த போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் வீசிய அவர் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை ஒட்டுமொத்தமாக காலி செய்த அவருக்கு நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசியிருந்த மெக்காய் கூறுகையில் : இந்த போட்டியை எனது தாய்க்காக நான் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட் கரியரில் நான் ஒரு சிறந்த வீரராக மாற என்னை எப்பொழுதுமே ஊக்கப்படுத்தி பேசியவர் எனது அம்மா தான். அவர்களுக்காக இந்த செயல்பாட்டை நான் அர்ப்பணிக்கிறேன். இந்த போட்டியில் முதல் விக்கெட் விழுந்ததுமே இந்திய அணி சற்று அழுத்தத்திற்குள் வந்திருக்கும் என்று நினைத்தேன். அதனாலேயே பவர் பிளேவிற்குள் இன்னும் சில விக்கெடுகளை கைப்பற்ற நினைத்தேன்.

இதையும் படிங்க : புவனேஷ்வர் குமார் இருந்தும் ஆவேஷ் கானுக்கு 20 ஆவது ஓவரை வழங்க காரணம் என்ன? – ரோஹித் விளக்கம்

அதன்படி இந்த போட்டியில் என்னால் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்தது. பந்துவீச்சில் கூடுதலாக எதையும் புதிதாக செய்ய வேண்டும் என்று யோசிக்காமல் என்னுடைய திறனுக்கு ஏற்றவாறு பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் மெக்காய் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement