புவனேஷ்வர் குமார் இருந்தும் ஆவேஷ் கானுக்கு 20 ஆவது ஓவரை வழங்க காரணம் என்ன? – ரோஹித் விளக்கம்

Rohit-and-Avesh
Advertisement

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தொடரை சமநிலை செய்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 19.4 ஓவர்களில் 138 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

Bhuvi

பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து 141 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டதால் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமநிலையில் இருந்தது.

- Advertisement -

ஆனால் முக்கியமான அந்த கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இந்த போட்டியில் வெறும் இரண்டு ஓவர்களை மட்டுமே வீசிய புவனேஷ்வர் குமார் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு ஓவர்களை முழுவதுமாக கொடுக்காமல் கடைசி ஓவரை ஆவேஷ் கானுக்கு கொடுத்தது தான் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.

Avesh Khan

இந்நிலையில் அப்படி கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் இருந்தும் ஆவேஷ் கானுக்கு வழங்கியது ஏன் என்பது குறித்து போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெளிவான விளக்கத்தை அளித்தார். அதன்படி அவர் கூறியதாவது : புவனேஸ்வர் குமார் டெத் ஓவர்களில் எவ்வாறு சிறப்பாக பந்து வீசுவார் என்பதை நாம் அனைவருமே பார்த்திருக்கிறோம். கடந்த பல ஆண்டுகளாகவே புவனேஸ்வர் குமார் இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் எவ்வாறு இந்த முக்கியமான கட்டங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பரிசோதிக்கவே நான் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு இறுதி கட்ட ஓவர்களை பந்து வீச வாய்ப்பினை வழங்கினேன். இதன் காரணமாகவே முக்கியமான 20-ஆவது ஓவரை ஆவேஷ் கானை வீசவைத்தேன்.

இதையும் படிங்க : அவரையும் கெடுத்து அணியையும் கெடுக்கும் முடிவை நிறுத்துங்க – ரோஹித் மற்றும் டிராவிட்டை விளாசும் முன்னாள் கேப்டன்

இளம் வீரர்களான அவர்கள் இருவருமே நல்ல திறமைசாலிகள். அவர்களை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் தான் இந்த போட்டியின் இருபதாவது கடைசி ஓவரை ஆவேஷ் கானுக்கு வழங்கினேன் என ரோகித் சர்மா தெளிவான விளக்கத்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement