அவரையும் கெடுத்து அணியையும் கெடுக்கும் முடிவை நிறுத்துங்க – ரோஹித் மற்றும் டிராவிட்டை விளாசும் முன்னாள் கேப்டன்

dravid
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதியான நேற்று வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. வீரர்களின் தாமதமான லக்கேஜ் வருகையால் 11 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அந்த அணியின் அற்புதமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் சூரியகுமார் யாதவ் 11, ஸ்ரேயாஸ் அய்யர் 10, ரிஷப் பண்ட் 24, ஹர்திக் பாண்டியா 31, ரவிந்திர ஜடேஜா 27, தினேஷ் கார்த்திக் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர்.

Thomas

- Advertisement -

அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஓபேத் மெக்காய் 6 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை தொடர்ந்து 139 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 8, கேப்டன் நிக்கோலஸ் பூரன் 14, சிம்ரோன் ஹெட்மையர் 6, ரோவ்மன் போவல் 5 என முக்கிய வீரர்களை அவுட் செய்து இந்திய பவுலர்கள் வெற்றிக்காக போராடினார்கள்.

சொதப்பலான முடிவுகள்:
இருப்பினும் 16 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த பிரண்டன் கிங் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 68* (52) ரன்களும் டேவோன் தாமஸ் 31* (19) ரன்களும் எடுத்ததால் 19.2 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் முதல் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகித்த இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த அந்த அணி 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இப்போட்டியில் வெற்றிக்காக பந்துவீச்சாளர்கள் போராடிய போதிலும் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

அத்துடன் முதல் போட்டியில் வென்றிருந்தபோதிலும் தேவையின்றி ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு சேர்க்கப்பட்ட ஆவேஷ் கான் மட்டும் மோசமாக பந்து வீசியது இதரப் பவுலர்களின் போராட்டத்தை வீணடித்தது. மேலும் புவனேஸ்வர் குமார் இருந்தும் ஆவேஷ் கானுக்கு கடைசி ஓவரை கொடுத்த ரோஹித் சர்மாவின் முடிவு தோல்வியை கொடுத்தது. இவை அனைத்தையும் விட இந்த தொடரில் சம்பந்தமே இல்லாமல் தொடக்க வீரராக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருவது பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

கெடுக்கும் முடிவு:
ஏனெனில் பொதுவாகவே 3, 4 ஆகிய இடங்களில் அசத்தலாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் அந்த இடத்தில்தான் சதமடித்து வெற்றிக்காகப் போராடி நல்ல பார்மில் இருந்தார். மேலும் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து தொடர்களில் இஷான் கிசான், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தொடக்க வீரர்களாக வாய்ப்பு பெற்று அசத்தலாக செயல்பட்டனர்.

Sanju Samson Deepak Hooda

அதுபோக இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக சோதிக்கப்பட்டார். இப்படி 4 வீரர்கள் தொடக்க வீரராக விளையாட காத்திருக்கும் நிலையில் சம்பந்தமில்லாமல் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் ஓபனிங் வீரராக களமிறங்குவது அவரின் தன்னம்பிக்கையை குறைத்து பார்மை இழக்க வைத்துள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -

ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டின் இந்த தேவையற்ற சோதனை முடிவுகள் அவரையும் கெடுத்து இந்தியாவுக்கும் தோல்வியை கொடுப்பதாக வேதனை தெரிவித்துள்ள இதுபற்றி இந்த தொடரில் வர்ணனையாளராக செயல்படும் போது பேசியது பின்வருமாறு. “4-வது இடத்தில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய சூர்யகுமார் யாதவ் அதே இடத்தில் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும். எனவே அவரை எதற்காக ஓபனிங் இடத்தில் களமிறக்குகிறீர்கள். ஒருவேளை நீங்கள் சோதிக்க முயற்சித்தால் ஷ்ரேயஸ் ஐயரை நீக்கி விட்டு இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுங்கள்”

Srikanth

“நான் சொல்ல வருவதெல்லாம் எளிமையாக நடந்து கொள்ளுங்கள், மாறாக சூர்யகுமார் யாதவ் போன்ற நல்ல தரமான வீரரின் செயல்பாடுகளை கெடுக்காதீர்கள். தயவு செய்து இதை செய்யாதீர்கள். ஏனெனில் தொடக்க வீரராக ஒருசில போட்டிகளில் ரன்கள் எடுக்க தடுமாறியதும் அவரின் தன்னம்பிக்கை குறைந்து விட்டது. கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையை பொருத்தம் விளையாட்டாகும்”

இதையும் படிங்க : IND vs WI : ஒரே ஜெர்ஸியுடன் விளையாடிய 3 இந்திய வீரர்கள். என்ன காரணம்? – முழுவிவரம் இதோ

“எனவே அவரது விஷயத்தில் என்ன திட்டமுள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரிஷப் பண்ட்டையும் அந்த முயற்சியில் சோதித்த நீங்கள் குறைந்தது 5 போட்டிகளில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது அணி வீரர்களுக்கு யாராக இருந்தாலும் குறைந்தது 5 – 6 போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement