- Advertisement -
இந்திய கிரிக்கெட்

320 ரன்ஸ்.. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை நொறுக்கிய நியூஸிலாந்து.. இந்தியாவுக்கு பின் கலக்கல் சாதனை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. உலகின் டாப் 8 அணிகள் விளையாடும் அந்தத் தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்றது. அதில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டேவோன் கான்வே 10 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் வில் எங் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினர். எதிர்ப்புறம் கேன் வில்லியம்சன் 1, டேரில் மிட்சேல் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக வந்த டாம் லாதம் சூழ்நிலைக்கு தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

நியூஸிலாந்து விளாசல்:

அவருடன் ஜோடி சேர்ந்த எங் அரை சதத்தை அடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல தொடர்ந்து பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட அவர் சதத்தை அடித்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 107 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருக்குப் பின் அதிரடியாக விளையாடிய டாம் லாதம் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து அசத்தினார்.

அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளன் பிலிப்ஸ் அதிரடியாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொண்டார். குறிப்பாக டெத் ஓவர்களில் பட்டாசாக விளையாடிய அவர் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சேர்ந்து தொடர்ந்து அசத்திய லாதம் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து அவுட்டே ஆகாமல் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 118* (104) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இந்தியாவை போல:

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து 320-5 ரன்கள் குவித்தது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து மூன்றாவது முறையாக 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தது. மேலும் சாம்பியன் டிராபியில் இந்தியாவுக்கு பின் பாகிஸ்தானுக்கு எதிராக 300+ ரன்கள் அடித்த 2வது அணி என்ற சாதனையையும் நியூசிலாந்து பெற்றுள்ளது.

இதையும் படிங்க: எங்களிடம் இருக்கும் இந்த பவர் போதும்.. இந்திய அணியை ஈஸியா வீழ்த்துவோம் – வாங்காதே கேப்டன் திமிர் பேச்சு

இதற்கு முன் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 319-3 ரன்களை அடித்த இந்தியா முதல் அணியாக அந்த சாதனையை படித்தது. மறுபுறம் சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் சுமாராக பவுலிங் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -