எங்களிடம் இருக்கும் இந்த பவர் போதும்.. இந்திய அணியை ஈஸியா வீழ்த்துவோம் – வாங்காதே கேப்டன் திமிர் பேச்சு

Shanto
- Advertisement -

அண்மையில் இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே துபாய் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் நாளை பிப்ரவரி 20-ஆம் தேதி இந்திய அணி தங்களது முதல் லீக் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்திய அணியை இந்த பலத்தை வைத்து வீழ்த்துவோம் :

அந்த வகையில் பிப்ரவரி 20-ஆம் தேதி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இந்திய அணி தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் வங்கதேச அணியும் தயாராகி வருவதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியை ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே கடந்த முறை இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் வீழ்த்திய வங்கதேச அணியானது இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தும் என அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

எங்களது அணியில் பல திறமையான ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர். அதுமட்டும் இன்றி தற்போதைய எங்களது அணியில் அனைத்து வீரர்களும் சரி சமமான பலத்துடன் உள்ளதால் எங்களுடைய நாளில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது. நிச்சயம் நாங்கள் எதிர் அணியை பற்றி கவலைப்படாமல் எங்களது திட்டங்களை வெளிப்படுத்தினால் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

அதுமட்டும் இன்றி எங்களது அணியில் 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் விளக்கு ஒளியின் கீழ் இந்திய அணியின் பேட்ஸ்மன்களை திணறடிக்க காத்திருக்கிறோம். அதுமட்டுமின்றி துபாயில் உள்ள ஆடுகளங்கள் எங்களது நாட்டில் உள்ள ஆடுகளம் போலவே இருக்கும் என்பதனால் நிச்சயம் எங்களது பந்துவீச்சின் மூலம் இந்திய அணியை வீழ்த்த முயற்சிப்போம் என நஜ்முல் ஷாண்டோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement