ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை கோலாலமாக நடைபெற இருக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது போட்டி இன்று கராச்சி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி :
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் ட்ராபி குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இதுவரை எட்டு முறை நடைபெற்றுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் 17 போட்டியில் விளையாடி மூன்று சதம் உட்பட 791 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
அதேபோன்று இந்திய அணி சார்பாக இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிகபட்ச ரன்களை அடித்த இந்திய வீரராக ஷிகர் தவான் 10 ஆட்டங்களில் விளையாடி மூன்று சதங்களை அடித்து 701 ரன்களுடன் உள்ளார்.
இவர்கள் இருவரது சாதனையையும் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 13 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் விராட் கோலி 5 அரை சதங்களுடன் 529 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 263 ரன்கள் அவர் குவிக்கும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையில் இருக்கும் கெயிலை மிஞ்சி வரலாறு படைக்க முடியும்.
இதையும் படிங்க : பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில்.. ஐ.சி.சி வெளியிட்ட தகவல் – விவரம் இதோ
அதோடு விராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டதால் இந்த சாதனையை செய்ய விராட் கோலிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 ஆட்டங்களில் விளையாடி 489 மட்டுமே எடுத்துள்ளதால் அவரால் இந்த சாதனையை எட்ட முடியாது என்றும் மேலும் இதுவே அவருக்கு கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



