NZ vs SA : பயிற்சி போட்டியிலேயே நிகழ்ந்த பரிதாபம்.. DLS காரணமாக வெற்றி கை மாறியது எப்படி

NZ vs RSA
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் அக்டோபர் 2ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 7வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 321/6 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு டேவோன் கான்வே 78* (73) கேப்டன் கேன் வில்லியம்சன் 37 (51) டாம் லாதம் 52 (56) கிளன் பிலிப்ஸ் 43 (40) ரன்கள் எடுத்து எடுத்து நல்ல அடித்தளத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் லோயர் மிடில் ஆர்டரில் மார்க் சாப்மேன் 20 (20) ஜிம்மிகி நீசம் 14 (11) மிட்சேல் சாட்னர் 16* (14) டார்ல் மிட்சேல் 25 (16) என அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி 300 ரன்களை தாண்டும் அளவுக்கு கணிசமான முக்கிய ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

மறுபுறம் பந்து வீச்சில் சற்று தடுமாற்றமாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி மற்றும் மார்கோ யான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 322 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ட்ரெண்ட் போல்ட் ஸ்விங் வேகத்தில் முதல் ஓவரிலேயே ரீசா ஹென்றிக்ஸ் கோல்டன் டக் அவுட்டாகி மாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த வேன் டெர் டுஷன் நிதானமாக விளையாடி நிலையில் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் குவிண்டன் டீ காக் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு போராடினார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் டுஷன் 51 (56) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் மார்க்ரம் 13 (13) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து வந்த ஹென்றிச் கிளாசின் அதிரடியாக விளையாட முயற்சித்து 39 (37) ரன்களில் போல்ட் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து சென்றார். அதனால் 29 ஓவரில் 167/4 என சரிவை சந்தித்த தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்ததாக வந்த மில்லர் 18* ரன்களும் மறுபுறம் போராடிய டீ காக் சதத்தை நெருங்கி 84* (89) ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்து போட்டியை நிறுத்தியது.

அப்போது டக் ஒர்த் லெவிஸ் விதிமுறைப்படி நியூசிலாந்தை விட தென்னாபிரிக்கா 7 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது. அதன் காரணமாக நியூசிலாந்து இப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அந்த வகையில் கடந்த போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த நியூசிலாந்து இப்போட்டியிலும் வென்று உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை இந்தியா போன்ற எதிரணிகளுக்கு காட்டியுள்ளது.

இதையும் படிங்க: NZ vs SA : பயிற்சி போட்டியிலேயே நிகழ்ந்த பரிதாபம்.. DLS காரணமாக வெற்றி கை மாறியது எப்படி

மறுபுறம் 6 விக்கெட்கள் கைவசம் இருந்ததால் போராடினால் கிடைத்திருக்க வேண்டிய தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு குறுக்கே மழை வந்து தோல்வியை பரிசளித்தது. குறிப்பாக 1992 உலகக்கோப்பை முதல் பல்வேறு தொடர்களில் முக்கிய சமயத்தில் மழை வந்து தென்னாப்பிரிக்காவின் வெற்றியை பதித்த கதைகள் ஏராளம். ஆனால் தற்போது பயிற்சி போட்டியிலேயே மழை வேலையை கட்டியதால் தென்னாப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையை தோல்வியுடன் துவக்கியுள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Advertisement