NZ vs NED : மாபெரும் சரித்திரம் படைத்த சான்ட்னர்.. நெதர்லாந்தை சுருட்டிய நியூஸிலாந்து.. டேபிள் டாப்பராக மிரட்டல்

Mitchell Santner
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 9ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 6வது போட்டியில் வலுவான நியூசிலாந்து கத்துக்குட்டியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த டேவோன் கான்வே 32 ரன்களில் அவுட்டானார்.

அவருடன் மறுபுறம் அசத்திய வில் எங் அடுத்து வந்த ரச்சின் ரவிந்த்ராவுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 70 (80) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் மீண்டும் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 51 ரன்களில் அவுட்டான நிலையில் மிடில் ஆர்டரில் அசத்திய டார்ல் மிட்சேல் 48 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அசத்திய சாட்னர்:
ஆனால் அடுத்ததாக வந்த கிளன் பிலிப்ஸ் 4, மார்க் சேப்மேன் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் டாம் லாதமும் 53 ரன்களில் நேரத்தில் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்து 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கடைசி நேரத்தில் மிட்சேல் சாட்னர் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 36* (17) ரன்களும் மார்ட் ஹென்றி 10* (4) ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் நியூசிலாந்து 322/7 ரன்கள் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் டெர் மெர்வி, வேன் மீக்ரம், ஆர்யான் தத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 323 என்ற பெரிய இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு பவர் பிளே முடிவதற்குள் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித் சிங் 12, மேக்ஸ் ஓ’தாவுத் 16 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். இருப்பினும் அடுத்ததாக வந்த ஆக்கர்மேன் நிதானம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் வந்த நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி 18, நிடமனரு 21 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறினார்கள்.

- Advertisement -

அதே போல மறுபுறம் போராடிய ஆக்கர்மேனும் 69 (73) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் எட்வார்ட்ஸ் 30, எங்கெல்பிரேச்ட் 29 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் முடிந்தளவுக்கு போராடியும் 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த நெதர்லாந்து 223 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்தி 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சேட்னர் 5 விக்கெட்டுகளும் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதையும் படிங்க: எந்நாட்டு மக்களுக்காக நான் செய்யாம.. யார் செய்வாங்க? மிகப்பெரிய முடிவை எடுத்த – ரஷீத் கான்

குறிப்பாக 10 ஓவரில் 59 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த மிட்சேல் சான்ட்னர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் நியூசிலாந்து சுழல் பந்து வீச்சாளர் என்ற டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான் படைக்காத மாபெரும் சரித்திரம் படைத்தார். மேலும் முதல் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த நியூசிலாந்து இந்த வெற்றியால் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி மிரட்டி வருகிறது.

Advertisement