எந்நாட்டு மக்களுக்காக நான் செய்யாம.. யார் செய்வாங்க? மிகப்பெரிய முடிவை எடுத்த – ரஷீத் கான்

Rashid-Khan
- Advertisement -

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி சனிக்கிழமை அன்று மேற்கு மாகாணத்தில் உள்ள ஹெரத் நகரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற பெரிய அளவில் ஏற்பட்டிருந்த ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதோடு தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவலின் படி : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 9000 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள் என்றும் 2445-பேர் வரை தற்போது உயிரிழந்தார்கள் என்ற தகவலும் வெளியாகி மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நிலநடுக்கம் குறித்து கேள்விப்பட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு சேர்த்து அவர்களுக்காக மிகப்பெரிய முன்னெடுப்பையும் கையில் எடுத்துள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய நாட்டிற்காக இந்த ஆண்டு விளையாடும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்காக தனக்கு கிடைக்கும் அனைத்து கட்டணத்தையும் ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ள அவர் மக்களுக்காக என்றுமே நான் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த டிவிட்டர் பதிவில் : ஹெரத், ஃபரா மற்றும் பத்கிஸ் போன்ற மேற்கு மாகானங்களில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தின் மோசமான விளைவுகளை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்துள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் என்னுடைய உலகக் கோப்பை போட்டி கட்டணம் அனைத்தையும் நான் மக்களுக்காக வழங்க இருக்கிறேன்.

இதையும் படிங்க : CWC 2023: அந்த வித்தையை சொல்லி கொடுக்குமாறு கேட்ட ஜாம்பவான் பிஷப்.. தாக்கூர் பதிலால் சிரிக்கும் ரசிகர்கள்

அதோடு கூடுதலாக உதவி தேவைப்படும் மக்களுக்காகவும் நிதி திரட்டும் பிரச்சாரத்தையும் தொடங்குவோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். உலக அளவில் நடைபெறும் அனைத்து வகையான லீக் போட்டிகளிலும் சரி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் சரி, முன்னணி வீரராக வலம் வரும் இளம் வீரரான ரஷீத் கான் தனது நாட்டு மக்களுக்காக எடுத்துள்ள இந்த முடிவு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement