CWC 2023: அந்த வித்தையை சொல்லி கொடுக்குமாறு கேட்ட ஜாம்பவான் பிஷப்.. தாக்கூர் பதிலால் சிரிக்கும் ரசிகர்கள்

Shardul Thakur
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது. முன்னதாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஷார்துல் தாக்கூருக்கு விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மும்பையைச் சேர்ந்த அவர் கடந்த 2018 – 2021 வரையிலான காலகட்டங்களில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியிலும் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தினார். குறிப்பாக 2021 காபா டெஸ்ட் போட்டியிலும் லண்டன் ஓவலில் நடைபெற்ற போட்டியிலும் ஆல் ரவுண்டராக அசத்திய அவர் சரித்திர வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சொல்லிக் கொடுங்க:
அதிலும் குறிப்பாக எதிரணி பார்ட்னர்ஷிப் போடும் போது அதை உடைப்பதிலும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுப்பதிலும் சிறந்தவராக இருக்கும் அவர் 2019 உலகக் கோப்பைக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக சாதனையும் படைத்துள்ளார். ஆனால் அதே சமயம் பேட்டிங்கில் பெரும்பாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறும் அவர் பந்து வீச்சில் எடுக்கும் விக்கெட்டுகளுக்கு நிகராக ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதனாலேயே அப்போட்டியில் வாய்ப்பு பெறாத அவரிடம் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் முன்னாள் வீரர் இயன் பிசப் “வோபல் சீம்” பந்துகளை நீங்கள் சிறப்பாக வீசுகிறீர்கள் என்பதால் அதை எப்படி வீச வேண்டும் என்பதை எனக்கும் கற்றுக் கொடுங்கள் என்று கேட்டார். ஆனால் அதற்கு அது தமக்கே தெரியாது என்று தெரிவித்த தாக்கூர் பந்து பிட்ச்சான பின் எந்த பக்கம் திரும்பும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்று சிரித்துக் கொண்டே கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“எனக்கு தெரியாது. நான் அதை இப்படி பிடித்து வீசுவேனே தவிர பெரிய அளவில் எதையும் செய்வதில்லை. மேலும் வீசிய பின் ஏதாவது ஒன்று நடக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் பந்தை ரிவர்ஸ் செய்வது கடினமாகும். அதனால் நீங்கள் க்ராஸ் சீம் போன்ற யுக்திகளை கையாள வேண்டும். இருப்பினும் பந்து பிட்ச்சான பின் என்ன நடக்கும் என்பதை எனக்கே தெரியாது”

இதையும் படிங்க: CWC 2023 : ஜாம்பவான்கள் மலிங்கா, மெக்ராத்தை மிஞ்சிய ஸ்டார்க்.. உலக கோப்பையின் லெஜெண்டாக உலக சாதனை

“அதனால் பேட்ஸ்மேன்கள் யூகிப்பதை போலவே நானும் யூகிக்கிறேன். சொல்லப்போனால் அதை கடவுளின் கையில் விட்டு விடுகிறேன்” என்று கூறியதை கேட்கும் போது ரசிகர்களுக்கும் சிரிப்புதான் வருகிறது என்றே சொல்லலாம். மேலும் உலக கோப்பையில் தமக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பற்றி கவலைப்படாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் பேட்டிங்கில் முன்னேறுவதற்கு பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement