CWC 2023 : ஜாம்பவான்கள் மலிங்கா, மெக்ராத்தை மிஞ்சிய ஸ்டார்க்.. உலக கோப்பையின் லெஜெண்டாக உலக சாதனை

Mitchell Starc
- Advertisement -

விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் போட்டியில் இந்தியாவிடம் போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த அணி சுழலுக்கு சாதகமான மைதானத்தில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

குறிப்பாக மிட்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46, டேவிட் வார்னர் 41 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை எடுத்தார். அதை தொடர்ந்து 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரை வீசிய மிட்சேல் ஸ்டார்க் புதிய பந்தை ஸ்விங் செய்து கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

உலகக்கோப்பை லெஜெண்ட்:
அதே போல ஹேசல்வுட் தம்முடைய அதிரடியான வேகத்தில் ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோரை டக் அவுட்டாக்கினார். அதனால் 2/3 என்ற மெகா சரிவை சந்தித்த இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மிடில் ஆர்டரில் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய விராட் கோலி 85 ரன்களும் கேஎல் ராகுல் 97* ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

இருப்பினும் 5 உலகக் கோப்பைகளை வென்றுள்ள அந்த அணி இது வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுக்கும் என்று நம்பலாம். முன்னதாக இந்த போட்டியில் எடுத்த 1 விக்கெட்டையும் சேர்த்து உலகக் கோப்பைகளில் இதுவரை ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் 19 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற மலிங்காவின் சாதனையை தகர்த்து அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. மிட்சேல் ஸ்டார்க் : 19*
2. லசித் மலிங்கா : 25
3. கிளன் மெக்ராத் : 30
4. முத்தையா முரளிதரன் : 30
5. வாசிம் அக்ரம் : 33

இதையும் படிங்க: CWC 2023 : அன்னைக்கு கலாய்ச்சு திட்டுனவங்க இப்போ பாராட்டுறாங்க.. ஆனா இன்னும் எனக்குள்ள அது போகல.. ராகுல் உருக்கம்

அதே போல் பந்துகள் அடிப்படையிலும் மலிங்காவை (1187) முந்தி உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையும் (941 பந்துகள்) அவர் படைத்துள்ளார். முன்னதாக 2019 தொடரில் 27 விக்கெட்டுகளை எடுத்து அவர் உலக கோப்பையில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற மெகா சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் இந்த வருடம் பயிற்சி போட்டியில் எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த அவர் எப்போதுமே உலகக்கோப்பையில் ஜாம்பவானாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement