ENG vs NZ : 30 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. நடப்பு சாம்பியனை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து ஜோடி.. உலக சாதனை வெற்றி

ENg vs NZ Rachin Conway
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. அதில் அகமதாபாத் நகரில் மதியம் 2.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தடுமாற்றமாக செயல்பட்டு 50 ஓவரில் 282/9 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

குறிப்பாக அடித்து நொறுக்கும் அணியாக கருதப்படும் இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோ 33, டேவிட் மாலன் 14, ஜோ ரூட் 77, ஹரி ப்ரூக் 25, ஜோஸ் பட்லர் 43, லியம் லிவிங்டன் 20 என முக்கிய வீரர்கள் அனைவரும் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் குறைந்த ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் மிட்சேல் சாட்னர் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

- Advertisement -

உலக சாதனை ஜோடி:
அதை தொடர்ந்து 283 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு சாம் கரண் வீசிய முதல் பந்திலேயே வில் எங் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு நம்பிக்கை நட்சத்திர துவக்க வீரர் டேவோன் கான்வேயுடன் அடுத்ததாக வந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பவுலர்களை தம்முடைய பங்கிற்கு அட்டகாசமாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தார்.

அந்த வகையில் பவர் பிளே கடந்தும் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய இந்த ஜோடி இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு நியூசிலாந்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. நேரம் செல்ல செல்ல அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடியில் முதலில் கான்வே சதமடிக்க அடுத்த சில ஓவர்களில் ரவீந்திராவும் சதமடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

அப்போதாவது அவுட்டாவார்களா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி கடைசி வரை பிரியாமல் 2வது விக்கெட்டுக்கு 30 ஃபோர்ஸ் 8 சிக்ஸருடன் 273* ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 36.2 ஓவரில் 283/1 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். சொல்லப்போனால் அந்தளவுக்கு 2019 ஃபைனலுக்கு பழி தீர்க்கும் வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்யும் போது எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் (278) அமைத்த ஜோடி என்ற உலக சாதனையும் படைத்தது.

இதையும் படிங்க: ENG vs NZ : 30 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. நடப்பு சாம்பியனை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து ஜோடி.. உலக சாதனை வெற்றி

இதற்கு முன் கடந்த 2011 உலக கோப்பையில் இதே இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் தரங்கா மற்றும் தில்சான் ஆகியோர் 230 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதில் கான்வே 19 பவுண்டரி 2 சிக்சருடன் 152* (121) ரன்களும் ரவீந்திரா 11 பவுண்டரி 5 சிக்சருடன் 123* (96) ரன்களும் எடுத்து நியூசிலாந்து இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவக்க உதவினார்கள்.

Advertisement